பனாமா நாட்டில் மோடி அரசின் முடிவுகளை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டியிருப்பதற்கு அவரது கட்சியில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என்றாலும் சசி தரூர் அதனை கண்டுகொள்வதில்லை.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எதிர்ப்பையும்...
மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார்.
மேற்குவங்கத்தின் அலிப்பூர்துவாரில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அலிப்பூர்துவார் மற்றும் கூச்பெஹார் மாவட்டங்களில் ரூ.1,010 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது: அண்மையில் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத், மால்டாவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அப்பகுதி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களின்...
சாவர்க்கர்-கோட்சே ரத்த சம்பந்தமான உறவினர்கள் அவதூறு வழக்கு: பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி தகவல்
admin - 0
இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ரத்த சம்பந்தமான உறவினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சாவர்க்கரின் பேரன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.
கோட்சேவுடன் தன்னை இணைக்கும் தனது தாய்வழி வம்சாவளியை சத்யாகி சாவர்க்கர் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக ராகுல்...
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசும்போது, “தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்”என குறிப்பிட்டார். இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவராஜ் குமார் பேசியதாவது:கன்னட மொழி மீதும் பெங்களூரு மாநகரின் மீதும்...
ஜப்பானியர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக 19 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் 6 முக்கிய நபர்களை கைது செய்துள்ளது.
வெளிநாட்டினருக்கு எதிராக குறிப்பாக ஜப்பான் நாட்டு மக்களை குறிவைத்து இந்தியாவில் நடைபெறும் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியாளர்கள் என்று கூறி இக்கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சட்டப்பூர்வ...
மத்திய வக்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படாத சொத்துகள் சேர்க்கப்படாது: அரசு வட்டாரங்கள் தகவல்
admin - 0
விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய வக்பு போர்ட்டலின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் விலக்கி வைக்கப்படும். இவை மத்திய தரவுத் தளத்தில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவு தளம், “ தயாரிப்பு-சரிபார்ப்பு-அனுமதி" ஆகிய மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த போர்ட்டல் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர்ட்டல் தற்போதைய வக்பு தரவு களஞ்சியமான இந்திய...
போக்சோ வழக்கிலிருந்து விடுவிப்பு: 100 கார், 10,000 ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. வெற்றி வலம்
admin - 0
போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 100 எஸ்யுவி கார்கள், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் வெற்றி வலம் வந்தார். பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் பிரிஜ் பூஷண் சிங்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷண் இருந்த காலத்தில், பல பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்துள்ளனர். இந்த...
சொத்துக்களை பதிவு செய்தல், விற்பனை ஒப்பந்தம், சொத்துக்களை விற்பதற்கான அதிகாரம் வழங்குதல், விற்பனை சான்றிதழ்கள் மற்றும் அடமானம் உட்பட அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது 117 ஆண்டு கால பத்திரபதிவு சட்டத்தை மாற்றும்.
சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய பல மாநிலங்கள் முடிவு செய்தன. இதனால் சொத்துக்களை ஆன்லைன் மூலம்...
எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் – மத்திய அரசு விரைவில் ஆலோசனை
admin - 0
தீ விபத்தின் போது எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகிறது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந் வர்மா. டெல்லியில் இவர் வசித்த அரசு குடியிருப்பின் வளாகத்தில் பொருட்கள் வைக்கும் அறையில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு படையினர் அங்கு எரிந்த...
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்படும் செல்போன்கள், கண்டறியப்பட்டு வெற்றிகரமாக உரியவர்களிடம் சேர்க்கப்படும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதற்காக போலீஸார் உதவியுடன் மத்திய அரசு நடத்தும் இணையதளம் உதவி வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பலர் தங்களது செல்போன்களை தவறவிடுகின்றனர். மேலும் சிலர், திருடர்களிடம் தங்களது செல்போன்களை பறிகொடுக்கின்றனர். அதேநேரத்தில் திருடப்படும் செல்போன்கள் குறித்து போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறைவாகவே உள்ளன. இருந்தபோதும் புகார்...










