Google search engine
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருமலையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா அறிவுறுத்தியுள்ளார். ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா தலைமையில் நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆவண வீடியோவை திருப்பதி எஸ்பியும், தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரியுமான (பொறுப்பு) ஹர்ஷவர்தன் விளக்கினார். அதன்பின்னர்,...
ஆபரேஷன் சிந்தூரில் இந்திய கடற்படை போரில் இறங்கியிருந்தால் பாகிஸ்தான் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கோவா அருகில் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பயணம் செய்து அதன் செயல்பாட்டு தயார் நிலையை ஆய்வு செய்தார். பின்னர் கடற்படை மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அவர்...
தன்னார்வலர்கள் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவை உ.பி. அரசு விரிவுபடுத்த உள்ளது. கடந்த 1962-ல் பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளுக்காக சிவில் டிஃபன்ஸ் என்கிற சிவில் பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இப்பிரிவு, உ.பி., ஒடிசா, குஜராத், இமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் 244 மாவட்டங்களில் உள்ளது. தன்னார்வலர்கள் பணியாற்றும் இப்பிரிவு, சில மாநிலங்களில் பெயரளவுக்கும் பாகிஸ்தான் எல்லைப்புற...
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவை இரண்டாவது முறையாக அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் திருப்பி அனுப்பி உள்ளார். கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2 பி பிரிவில் ரூ.2...
தீவிரவாதம் எனும் நச்சுப் பாம்பு மீண்டும் தனது தலையை தூக்க முயன்றால், துளையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு நசுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிஹார் மாநிலம் கராகத் நகரில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: இந்தியப் பெண்கள் அணியும் குங்குமத்தின் சக்தியை பாகிஸ்தானும் இந்த உலகமும் பார்த்தன. பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்பில் இருந்த தீவிரவாதிகளை...
 ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மூத்த அரசு அதிகாரி பைகுந்த நாத் சாரங்கியின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச வழக்கில் இருந்து தப்பிக்க 500 ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக அவர் அள்ளி வீசினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சி துறையின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் சாலை திட்ட தலைமை பொறியாளராக பைகுந்த நாத் சாரங்கி பணியாற்றி...
இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கலாம். அப்போது ராணுவத்துக்கு செலுவு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் (கேபிஎம்ஜி) கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 20147-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்- இ- தொய்பா கமாண்டர் சைஃபுல்லா கசூரி என குற்றம் சாட்டப்பட்டது. லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத் உத்தரவின் பேரில் கசூரி,...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) 2025 உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்தது. இது தற்போது, 23,500 கோடி என்ற சாதனை...
ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாஸ்குசன் வனப்பகுதியில்...