பெங்களூரு கூட்ட நெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை, மகனின் சமாதியில் கண்ணீர் சிந்தி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்....
உ.பி. கோயிலில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்தரின் கைப்பையை, 8 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீஸார் கண்டுபிடித்தனர். உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ளது பிருந்தாவன் பங்கி பிஹாரி கோயில். பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள இக்கோயிலில் ராதாகிருஷ்ணர் மூலவராக இருக்கிறார்.
இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அலிகரை சேர்ந்த அபிஷேக் அகர்வால் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த வியாழக்கிழமை...
மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பது அவமதிக்கும் செயல்: மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கருத்து
admin - 0
மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பது அவர்களை அவமதிக்கும் செயல் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். குறிப்பாக, வாக்காளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது ஏன், திடீரென வாக்கு சதவீதம் அதிகரித்தது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்போதே தேர்தல் ஆணையம்...
உத்தர பிரதேச மாநிலத்தில் வாகனங்களை பதிவு செய்யும்போது வாகன விற்பனையாளர்கள் பலர் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்ற புகார் உள்ளது. இதையடுத்து மாநில அரசு 25 வாகன விற்பனையாளர்களின் வர்த்தக உரிமங்களை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஜூன் 3-ம் தேதி தொடங்கிய இடைநீக்க காலத்தில் லக்னோ, பாராபங்கி, சீதாபூர், குஷிநகர், மொரதாபாத் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களின் விற்பனையாளர்கள் சிக்கி உள்ளனர்.
இந்த விற்பனையாளர்கள் 25 பேரும், வாகனங்களை...
எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா விரைவில் ராஜினாமா
admin - 0
எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விரைவில் ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா நீதிபதியாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அப்போது நீதிபதியின் வீட்டில் ஓர் அறையில் எரிந்த நிலையில்...
உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் செயல்பாட்டை விளக்கிக் கூறுவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் தனித்தனியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினர்.
அந்த வகையில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு 6 ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்...
மேகாலயாவின் சோரா (சிரபுஞ்சி) அருகே தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ராஜா ரகுவன்ஷியின் மனைவி உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையிடம் சரணடைந்தார்.
மே 23 அன்று மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்லக்கியத் கிராமத்தில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேவில் இருந்து வெளியேறிய புதுமணத் தம்பதிகளான ராஜா மற்றும் சோனம் காணாமல் போயினர். தேனிலவுக்கு வந்த இந்தத் தம்பதிகள்...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஐசிஐசிஐ வங்கி கிளை உள்ளது. இங்கு வாடிக்கையாளர் தொடர்பு மேலாளராக பணியாற்றியவர் சாக் ஷி குப்தா. இவர் குறைந்த கால கட்டத்தில் அதிக பணத்தை சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த வைப்பு நிதியை சிறிது சிறிதாக எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்குச் சந்தையில் சாக் ஷிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதனால், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில்...
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜூன் 15 முதல் 17-ம் தேதி வரை கனடாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங்கேற்க பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின்...
ஹைதராபாத்தில் பட்டப்பகலில் அனாதையாய் கிடந்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் பாலாநகர் அருகே உள்ள பூச்சுபல்லி எனும் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனாதையாய் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வந்ததால், பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பாலாநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அந்த...










