இந்திய போர் விமானி அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது, நமது விமானப்படையின் குழு கேப்டன்...
நோயாளியின் உறவினரிடம் திருடிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞரின் சட்டையை கழற்றி போலீஸார் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளைஞர் இஷ்ரக் அகமது. (24). இவர் ஜம்முவின் காசிம் நகரில் தங்கியுள்ளார். ஜம்மு அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் உறவினரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
பொதுமக்கள் அவரை பிடித்து போலீஸில்...
காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத மனநிலையின் பிரதிபலிப்புதான் எமர்ஜென்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவசர நிலையை அப்போது பிரகடனப்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத...
பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள் என கார்கே கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. இதில் ஒரு குழுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமை தாங்கினார்.
இந்த பயணம் குறித்து,...
உ.பி.யில் கதாகாலட்சேபம் செய்பவர் மீது தாக்குதல்: பிராமணர் அல்லாதவர் பிரசங்கம் செய்யக் கூடாது என மிரட்டல்
admin - 0
உத்தரபிரதேசத்தில் 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருபவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பிரசங்கத்தை பிராமணர் அல்லாதவர் செய்யக் கூடாது என அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப்பவர் முகுந்த்ணி சிங் யாதவ். இவர் தனது குழுவினருடன் கடந்த 15 வருடங்களாக உ.பி. முழுவதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. இச்சூழலில் அவர் மேற்கு உ.பி.யின் எட்டாவா மாவட்டம், தந்தர்பூர் கிராமத்தில் 2...
“அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்நிலையில்,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியான உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து 'எக்ஸ்' வலைதளத்தில் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். இப்போது அவர் மீண்டும் வெளிநாடு சென்று, மற்றொரு வெளிப்படுத்தப்படாத இடத்துக்கு சென்றுள்ளார். அவர் இவ்வாறு அடிக்கடி ரகசியப் பயணம் செல்வது ஏன்? அடிக்கடி...
மிசோராம், கோவாவுக்கு அடுத்தபடியாக 3-வது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. யுனெஸ்கோ விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95 என்ற இலக்கை தாண்டினால் அந்த மாநிலம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக கருதப்படும். கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 93.7 சதவீதமாக இருந்தது. 23,184 பேர் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்களாக இருந்தனர்.
இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவின் கல்வியறிவு பெற்றோர்...
அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணித்தவர்கள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் என 247 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் விமானத்தில் பயணித்த கேரள செவிலியர் ரஞ்சிதா நாயரும் (37) ஒருவர். அவரது உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் 11...
ஏமாற்றிய காதலனை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் ரேனி ஜோஷில்டா.
இவர் பன்னாட்டு நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் திவிஜ் பிரபாகர் என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் திவிஜ் பிரபாகர், இவரது காதலை ஏற்காமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோஷில்டா, தனது காதலரை பழிவாங்க முடிவு...










