பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒரு...
ஆயுதங்களை கடத்தியதாக ராணுவத்தைச் சேர்ந்த 3 சுமைதூக்கும் நபர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மாத சம்பள அடிப்படையில் சுமை தூக்கும் நபர்களை ராணுவ அதிகாரிகள் தற்காலிகமாக பணியமர்த்தி வருகின்றனர்.
இந்த சுமை தூக்கும் நபர்கள் சிக்கலான மலைப்பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்களுக்கு உதவியாக இருப்பர். ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சுமந்து சென்று உதவி செய்வர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம்...
வர்த்தக செய்திகளை வெளியிடும் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா, வங்கதேசம், மியான்மர் மற்றும் பூடான் அருகேயுள்ள தனித்தனியான பகுதிகளை இணைக்கும் வகையில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து, 9,984 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைத்துள்ளது. தற்போது கூடுதாக 5,055...
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நடிகை ஊர்வசிக்கு அமலாக்கத் துறை சம்மன்
admin - 0
சட்டவிரோத சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 1xBet நிறுவனத்துக்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியது.
இந்நிலையில்,...
ஒடிசாவில் காந்தமால் மாவட்டத்தின் சலகுடா பகுதியில் சேவாஸ்ரம் பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள், சக மாணவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போது, அவர்களின் கண் இமையில், உடனடியாக ஒட்டிக் கொள்ளும் பசையை (குயிக் ஃபிக்ஸ்) ஊற்றி குறும்புத்தனம் செய்தனர்.
இதில் 8 மாணவர்களின் இமைகள் ஒட்டிக் கொண்டன. அந்த மாணவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்போது வலி மற்றும் எரிச்சலில் கூச்சலிட்டனர்....
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் (73) கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ அருகே ஈஸ்ட் பே பகுதி அமைந்துள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஹர்ஜித் கவுர் தனது இரு மகன்களுடன் ஈஸ்ட் பே பகுதியில் குடியேறினார். சுமார் 33 ஆண்டுகளாக அவர் ஈஸ்ட் பே பகுதியில் வசித்து வருகிறார். அவரது இரு...
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்ளது. இது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி ஆகும். அங்குள்ள ஹூபர்ட் சாலையில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரூ.153.59 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார்.
அமெரிக்காவின் யுபிக்விட்டி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் பெரா கடந்த 2018-ம் ஆண்டில் ட்ரிபெகாவில் உள்ள...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பது ஒழிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் தங்குகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்ட மலைப் பகுதியில் கடந்த வாரம் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உணவுப் பொருட்கள், சிறிய கேஸ் அடுப்பு, குக்கர், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள்...
ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக விமானத்தில் இருந்த 200 பயணிகள் சுமார் 2 மணி நேரம் விமானத்திலேயே இருந்தனர். இதன்பிறகு அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று விமானம்...
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
admin - 0
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தராகண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக கங்கோத்ரி அருகே தரளி என்ற கிராமம் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தொடர் மழையால் உத்தராகண்ட் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வாராணசியில் இருந்து...










