அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து
admin - 0
சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு எப்படி வரநேர்ந்தது என்பது குறித்து சிந்தி நண்பர்களிடம் ஏராளமான கதைகளை கேட்டிருக்கிறேன். இந்தியாவில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பி சிறப்புடன் உள்ளனர்.
அதேபோன்று, விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் வல்லுநர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில்...
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு இந்த மாதம் தொடக்கத்தில் நடந்தது. அப்போது சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, வரும் அக்டோபர் 30-க்குள் கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து பல மாநில தலைமை...
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது நீர்நிலைகளில் குளிப்பதன் மூலம் பலர் இந்த கொடிய வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வேறு ஏதாவது தீர்வு கிடைக்கும் வரை நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
சில நீர் ஆதாரங்கள் பாதுகாப்பாக இருந்தபோதிலும் சுத்திகரிக்கப்படாத இயற்கை நீர்நிலைகளில் அச்சுறுத்தல் உள்ளது. அங்கே...
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. 2024-25-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர். இந்நிலையில் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண் ணெய் வாங்குவதற்காக 25 சதவீத அபராத வரியும் விதித்தார்.
இரு நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக...
அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.22) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் ரூ.5,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22-ல் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இரு மாநிலங்களிலும் ரூ.5,100 கோடிக்கும் அதிகமான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
மேலும்,...
டெல்லி- ஒடிசா புருசோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணம் செய்த பயணிகள் சிலர் படுக்கை விரிப்பு, கம்பளி ஆகியவற்றை தங்கள் பைகளில் எடுத்துச் சென்று சிக்கினர். தொலை தூர ரயிலில்களில் தூங்கும் வசதி கொண்ட ஏ.சி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவை வழங்கப்படும்.
இரவில் தூங்கும்போது அவற்றை பயன்படுத்திய பின், பயணிகள் அவற்றை தங்கள் இருக்கையில் வைத்து விட்டு செல்வது...
பிரபல இந்தூர் ஷீதலா மாதா மார்க்கெட்டில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை: உள்ளூர் பாஜக தலைவர் உத்தரவால் சர்ச்சை
admin - 0
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்கெட் உள்ளது. இங்கு பெண்களுக்கான ஆடைகள் மொத்தமாக விற்கப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் இந்த மார்க்கெட் பிரபலமாக உள்ளது. இங்கு 501 கடைகள் உள்ளன. சமீபத்தில் இந்த மார்க்கெட் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
அதில் உள்ளூர் பாஜக தலைவரும் எம்எல்ஏ மகனுமான ஏகலைவா சிங் கவுர் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘ஷீதலா மாதா மார்க்கெட்டில்...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ‘ஆந்த்ராத்’ கடற்படையிடம் ஒப்படைப்பு
admin - 0
ஆழமற்ற கடற்பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்களை (ASW-SWC) கொல்கத்தாவின் ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினீயர்ஸ்' (GRESE) நிறுவனம் கட்டி வருகிறது.
இதில் முதலாவது போர்க் கப்பலான ‘அர்லானா' கடந்த ஜூன் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது போர்க் கப்பலை (ஆந்த்ராத்) இந்திய கடற்படையிடம் அந்த நிறுவனம் கடந்த சனிக்கிழமை ஒப்படைத்தது.
லட் சத்தீவு தீவுக்கூட்டத்தில் உள்ள ஆந்த்ராத் தீவிலிருந்து இதற்கான பெயர் பெறப்பட்டுள்ளது....
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து போலீஸார் சாலைகளில் நின்று, அபராதத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் அபராதத்தை செலுத்தினால் 50% தள்ளுபடி என போலீஸார் அறிவித்தனர்.
இதையடுத்து வாகன ஓட்டிகள் தாமாக முன்வந்து ஆன்லைன் மூலமாக அபராதத்தை செலுத்துவதில் ஆர்வம் காட்டினர். அதன்படி செப்டம்பர்...
கன்னட எழுத்தாளரும் வழக்கறிஞருமான பானு முஸ்தாக்கின் ‘ஹார்ட் லாம்ப்' நூலுக்கு அண்மையில் சர்வதேச புக்கர் பரிசு கிடைத்தது. இந்த விருதை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்பதால், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஸ்தாக்கிற்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பானு முஸ்தாக் இந்துக்களின் தசரா விழாவை தொடங்கி வைக்க எதிப்பு தெரிவித்து மைசூருவின் முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா...










