மராத்திக்கு எதிராக பேசிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சிவசேனா (உத்தவ் அணி ) தொண்டர்கள் அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விரார் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வந்தார். அவர் சில நாட்களுக்கு முன் மராத்தி, மகாராஷ்டிரா, மராத்தி தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து, விரார் ரயில் நிலையம் அருகே நடுரோட்டில், மராத்தி குறித்து...
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டம் சங்காரியா நகரைச் சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால் (71). இவருடன் பிறந்தவர்கள் 8 பேர். இதில் 4-வதாக பிறந்த அகர்வால் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் வங்கியில் (இப்போது எஸ்பிஐ) துணைப் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். 38 ஆண்டு பணிக் காலத்துக்குப் பிறகு கடந்த 2014-ல் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மனைவி உயிரிழந்ததால் அகர்வால் கடும் மன உளைச்சலுக்கு...
கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் தங்கி இருந்தார். அவரை அம்மாநில போலீஸார் பத்திரமாக மீட்டனர். கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்துள்ளது.
அங்குள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக மலையேற்றம், சவாரி ஆகியவற்றில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்வாளர் தர் தலைமையிலான காவல் துறையினர் கடந்த...
ஏர் இந்தியா விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானப் பயணிகள், ஊழியர்கள் 241 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் விமானம் மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்ததில் அங்கிருந்த முதுகலை மாணவர்கள்...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கல்லூரி ஒன்றில், கல்வியியல் துறை் தலைவராக பணியாற்றியவர் சமிரா குமார் சாகு. இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து கல்லூரியின் புகார் குழுவில் மாணவி புகார் அளித்தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நேற்று முன்தினம் தீக்குளிக்க முயன்றார்.
உடனே அருகில் இருந்தவர்கள் மாணவியை காப்பாற்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி புகார்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு...
மியான்மர் உல்பா-ஐ அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவ உயர் அதிகாரி தகவல்
admin - 0
குவாஹாட்டி: அசாம் ஐக்கிய சுதந்திர முன்னணி-இண்டிபென்டன்ட் (உல்பா-ஐ), அசாம் மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்து கோரி வருகிறது. மத்திய அரசால் தடை செய்யப் பட்ட இந்த அமைப்பின் கிழக்கு தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ளது.
இதன் மீது இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் மெதி உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் உல்பா-ஐ அமைப்பு நேற்று...
வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது: இதுவரை, மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன, ஒட்டுமொத்த அளவில் 39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கு நிச்சயமாக எட்டப்படும்.
இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2025-2030) ஒரு...
சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக பிரகாஷ்ராஜ், பிரனீதா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 பேரிடம் விசாரணை
admin - 0
சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
சட்ட விரோதமான சூதாட்ட செயலிக்கு நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் விளம்பரம் செய்ததாக தெலங்கானா போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதன்படி ராணா தக்குபாட்டி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மன்ச்சு லட்சுமி, பிரனீதா, நிதி அகர்வால்,...
மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல போக்குவரத்து அதிகாரி ஹேமங்கி பாட்டீல் பேசியதாவது: பள்ளிகளில் மாணவர்களுக்கு தினசரி கல்வியின் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பிக்கப்பட வேண்டும். இது விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். மேலும் சாலையை பொறுப்புடன் பயன்படுத்தும் கலாச்சாரத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தும்.
பெற்றோர்களை விட ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் கேட்கின்றனர். குழந்தைகள் இளம் வயதிலேயே...










