மேற்கு வங்க இறுதிப் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கை, ஆட்சேபனை மனுக்களை பரிசீலிக்க மாவட்ட நீதிசார் அலுவலர்களை நியமித்து கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது.
மேற்கு வங்க அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையற்ற நிலையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தெளிவுபடுத்தியது. கூடுதலாக ஜார்க்கண்ட், ஒடிசா நீதிசார் அலுவலர்களை...
டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப்புக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘பாரத் மண்டபத்தில் தேசிய அவமானம்' என்ற தலைப்பில் முன்னாள் நீதிபதிகள், ஐபிஎஸ், ராணுவ அதிகாரிகள் உட்பட 277 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இளைஞர் காங்கிரஸார் நடத்திய சட்டையில்லாத போராட்டம் நாட்டின் மாண்புக்கு செய்யப்பட்ட துரோகம்.
அதுவும்...
அவிமுக்தேஷ்வர் மீது போக்ஸோ வழக்கு பதிவு: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல்
admin - 0
உத்தராகண்டின் ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியாராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த். பிரயாக் ராஜ் மகரமேளா புனித நீராடலின் போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் உ.பி. போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அவரது ஆதரவாளர் படுகாயமடையக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வலியுறுத்தினார். பலன் இல்லாத நிலையில் மகரமேளாவை புறக்கணிப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், மகரமேளாவில் தனது முகாமில் சீடர்களாக இருந்த சிறுவர்களில் மூவரை...
60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
admin - 0
திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சியில் 60 லட்சம் லிட்டர் நெய்யில் கலப்படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்களை விநியோகம் செய்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
ஆந்திர பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது நெய்யில் கலப்படம் என்று தெரிந்தே வாங்கியதாக தீவிர குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதன் மீது...
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்காரரிடம் பால் வாங்கிய பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் தற்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து பால்காரரை கைது...
குடியரசு தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜி விழா: மார்பளவு சிலையை திரவுபதி முர்மு திறந்து வைத்தார்
admin - 0
குடியரசுத் தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜியின் மார்பளவு சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரலான ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி விழா நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே அசோக மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள பிரம்மாண்ட திறந்த படிக்கட்டில், எட்வின்...
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்கின்றனர்.
இங்கு மத நம்பிக்கை கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், பொற்கோயிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை அறிந்து வந்து அறிக்கை தர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு குழு அமைத்து உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் திருமலையிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் ஏழுமலையானை தரிசிக்க புதிய சட்டதிட்டங்கள் தீவிரமாக அமல் படுத்தப்பட உள்ளன.
ஜம்முவின் கீஷ்த்வார் பகுதியில் நேற்று முன்தினம், மத்தியப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுடன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை நோக்கி குரைத்துள்ளது. இதையடுத்து, டைசனை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்தம் கொட்டியபோதும் டைசன் தொடர்ந்து குரைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் தொடங்கிய நடவடிக்கையில் 3 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த...
மத்திய உள்துறை சார்பில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கையில் கூறியிருப்பதாவது: சில அண்டை நாடுகள் தீவிரவாதத்தை நாட்டின் கொள்கையாக கடைப்பிடித்து வருகின்றன. இதனால் இந்தியா பாதிக்கப்படுகிறது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரஹார் (PRAHAAR) என்ற தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்படுகிறது.
இதன்படி தீவிரவாத...
மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு வயலில் மட்டும் 570 வகையான நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இது விதைகளின் மரபைப் பாதுகாக்கும் பேரியக்கம் ஆகும். உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்திருக்கிறது.
15 கோடி டன்களுக்கும் மேலாக அரிசி உற்பத்தி செய்வது சாதாரண...










