டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது வீட்டில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது. அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இதை எதிர்த்து...
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச்சார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச்சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக்...
கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (101) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவரும் கேரள அரசியலில் முக்கிய இடத்தை வகித்தவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், கடந்த 2019-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.
கடந்த 2021 ஜனவரியில் நிர்வாக சீர்திருத்த குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார். திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன், மகள் வீட்டில் ஓய்வு...
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. உட்பட 12 பேர் கைது: மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி
admin - 0
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்தகால ஆட்சியின்போது ரூ.3,500 கோடி மதுபான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெகன் கட்சியை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார். அப்போது, தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அரசே...
பிஹாரில் தேர்தல் ஆணையத்தால் கண்டுபிடிக்க முடியாத 11,000 வாக்காளர்கள் சட்டவிரோத குடியேறிகள்?
admin - 0
பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் 32 லட்சம் வாக்காளர்களை மட்டுமே சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 11,000 பேரை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்பதுடன் அவர்கள் அங்கு வசித்ததாக அண்டை வீட்டாராலும் உறுதி செய்யப்படவில்லை....
ஆக்ராவைச் சேர்ந்த 33 வயது மற்றும் 18 வயதுடைய இரண்டு சகோதரிகள் காணாமல் போன வழக்கில் தொடங்கப்பட்ட விசாரணையில் அவர்கள் லவ் ஜிகாத் கும்பலால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜஸ்தானைச் சேர்ந்த முகமது அலி உள்ளிட்ட 10 பேர் உத்தர பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மத மாற்றத்துக்காக அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து நிதி திரட்டியது தெரியவந்தது.
முகமது அலி மதம் மாறுவதற்கு முன்பாக இந்து மதத்தை...
2006-ல் 189 பேர் உயிரிழக்க காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு
admin - 0
கடந்த 2006-ம் ஆண்டு 189 உயிரிழக்க காரணமாக இருந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேரை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்தது. சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகரில் ஓடும் 7 ரயில்களில், 11 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து குண்டுகள் தன. இதில் 189 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக...
கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த கோயிலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து தர்மஸ்தலா கோயிலில் துப்புரவு பணியாற்றிய 52 வயதான ஒருவர், போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தர்மஸ்தலா போலீஸார் கோயில் நிர்வாகத்தின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து 65 வயதான பெங்களூருவைச் சேர்ந்த...
சிறுநீர் குடிக்க வைத்து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமியார் மீது வழக்கு
admin - 0
மகாராஷ்டிராவில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி, பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம், வஜாபூர் தாலுகாவில் உள்ளது ஷியூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கோயிலில் சஞ்சய் பகாரே என்பவர் சாமியாராக இருக்கிறார்.
தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முடியும், அகோரி பூஜை மூலம் குழந்தை இல்லாத...
ஒடிசாவின் புரி மாவட்டம், பாலங்கா அருகேயுள்ள பயாபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்ம நபர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
சிறுமியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த...










