Google search engine
 கர்​நாடக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சந்​தோஷ் லாட் பெங்​களூரு​வில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் கடந்த 2024-ம் ஆண்​டில் மகளிருக்கு ஆண்​டுக்கு 6 நாட்​கள் மாத​வி​டாய் விடு​முறை​ என்ற கொள்கை திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதனை 12 நாட்​களாக அதி​கரிக்க வேண்​டும் என கோரிக்கை வந்​தது. அதன் அடிப்​படை​யில் ஆண்​டுக்கு 12 நாள்​கள் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கும் வகை​யில் இந்​தக் கொள்கை திட்​டம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. முதல்​வர் சித்​த​ராமையா தலை​மை​யில் வியாழக்​கிழமை நட‌ந்த...
பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​பின் ஆதர​வுடன் பஞ்​சாபில் ரகசி​ய​மாக செயல்​பட்ட பப்​பர் கல்சா தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த 1978-ம் ஆண்​டில் பப்​பர் கல்சா தீவிர​வாத அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்​தியா விமான குண்​டு​வெடிப்​பு, 1985-ம் ஆண்டு ஜப்​பானின் நரிடா சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​தின் மீதான தாக்​குதல் உட்பட பல்​வேறு தீவிர​வாத செயல்​களில் பப்​பர் கல்​சாவுக்கு தொடர்பு உள்​ளது. அமெரிக்​கா, ஐரோப்​பிய...
 ஆந்​தி​ரா​வின் கோனசீமா மாவட்​டம், ராய​வரம் கணபதி மைதானத்​தில் தீபாவளி பண்​டிகைக்​காக பட்​டாசுகளை பார்​சல் செய்து அனுப்​பும் பணி நடை​பெறுகிறது. இங்கு புதன்​கிழமை திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் 4 பெண்​கள் உட்பட 6 தொழிலா​ளர்​கள உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதில் 4 பேரின் நிலைமை மோச​மாக இருந்​தது. இந்​நிலை​யில், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயி​ரிழந்​தனர். ஒட்​டுமொத்த உயி​ரிழப்பு 8...
உள்​நாட்டு நிறு​வன​மான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்​லைன் தளத்​தில் உள்ள மென்​பொருட்​களை அலு​வலக பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​தும்​படி மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்​தில் உயர் அதி​காரி​களுக்கு சுற்​றறிக்கை அனுப்​பியது. இந்​நிலை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தனது இ-மெ​யில் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்​றி​யுள்​ளார். இது குறித்து எக்ஸ் தளத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள தகவலில், ‘‘நான் சோஹோ மெயிலுக்கு மாறி​விட்​டேன். என்​னுடைய இ-மெ​யில் முகவரி மாறி​யுள்​ளதை குறித்​துக் கொள்​ளுங்​கள். எனது...
கர்​நாட​கா​வில் சாதி​வாரி கணக்​கெடுப்பு பணி​களுக்​கான காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆசிரியர்​கள் இந்த பணி​யில் ஈடு​படு​வதற்​காக பள்​ளி​களுக்கு அக்​டோபர் 18ம் தேதி வரை விடு​முறை அளிக்​கப்​பட்டுள்ளது. இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா பெங்​களூரு​வில் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் சமூக,கல்​வி,பொருளா​தார கணக்​கெடுப்பு பணி​கள் கடந்த செப்​டம்​பர் 22ம் தேதி தொடங்கி அக்​டோபர் 7ம் தேதி​யுடன் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால் கணக்​கெடுப்பு பணி​கள் இன்​னும் முழு​மை​யாக நிறைவடைய​வில்​லை. கொப்​பல் மாவட்​டத்​தில் 97 சதவீத​மும், உடுப்பி 63 சதவீத​மும், த‌ட்​சிண...
பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறுகையில், “என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டோம். என்றாலும் என்டிஏ கூட்டணியை...
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால்...
கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம் நடத்தும் பால் பண்ணைக்கு சென்று பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். (ஆலியா பட் என்ற பசுவையும் சந்தித்தேன்!! திருமதி ஆலியா பட் மன்னிக்க வேண்டும். என்றாலும் அது ஒரு அழகான பசு)" என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா...
குளோபல் பின்​டெக் விழா​ மும்​பை​யில் நேற்று தொடங்​கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய​தாவது: உலகளா​விய நிதி தொழில்​நுட்ப தலைநக​ராக இந்​தியா சிறந்து விளங்​கு​கிறது. நிதி தொழில்​நுட்​பத்​தில் புது​மை, அளவு மற்​றும் உள்​ளடக்​கத்​தில் புதிய அளவு​கோல்​களை இந்​தியா நிர்​ண​யித்​துள்​ளது. தொழில்​நுட்​பம் என்​பது பொது நலனுக்​கான​தாக இருக்க வேண்​டும். எந்த நேரத்​தி​லும் அதனை மற்ற நாடு​களுக்கு எதி​ரான ஆயுத​மாக பயன்​படுத்​தக்​கூ​டாது. இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​தார்....
 இ​மாச்சல பிரதேசத்​தில் நிலச்​சரி​வில் பேருந்து சிக்கி 15 பயணி​கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் மண்​ணில் புதைந்​துள்​ளனர். இமாச்சல பிரதேசத்​தில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அங்கு மழை, வெள்​ளம், நிலச்​சரிவு காரண​மாக கடந்த சில மாதங்​களில் 320 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ரூ.3 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்​தின் பிலாஸ்​பூர் பகு​தி​யில் கனமழை காரண​மாக நேற்று மாலை நிலச்​சரிவு ஏற்​பட்​டது. அப்​போது அந்த...