கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மகளிருக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை 12 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 12 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் வகையில் இந்தக் கொள்கை திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் வியாழக்கிழமை நடந்த...
பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் கைது
admin - 0
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் பஞ்சாபில் ரகசியமாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 1978-ம் ஆண்டில் பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு, 1985-ம் ஆண்டு ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் பப்பர் கல்சாவுக்கு தொடர்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய...
ஆந்திராவின் கோனசீமா மாவட்டம், ராயவரம் கணபதி மைதானத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை பார்சல் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. இங்கு புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 4 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை மோசமாக இருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8...
உள்நாட்டு நிறுவனமான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்லைன் தளத்தில் உள்ள மென்பொருட்களை அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும்படி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இ-மெயில் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்றியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘நான் சோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். என்னுடைய இ-மெயில் முகவரி மாறியுள்ளதை குறித்துக் கொள்ளுங்கள். எனது...
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுவதற்காக பள்ளிகளுக்கு அக்டோபர் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் கூறியதாவது: கர்நாடகாவில் சமூக,கல்வி,பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
கொப்பல் மாவட்டத்தில் 97 சதவீதமும், உடுப்பி 63 சதவீதமும், தட்சிண...
பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறுகையில், “என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டோம். என்றாலும் என்டிஏ கூட்டணியை...
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால்...
கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம் நடத்தும் பால் பண்ணைக்கு சென்று பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். (ஆலியா பட் என்ற பசுவையும் சந்தித்தேன்!! திருமதி ஆலியா பட் மன்னிக்க வேண்டும். என்றாலும் அது ஒரு அழகான பசு)" என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா...
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
admin - 0
குளோபல் பின்டெக் விழா மும்பையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உலகளாவிய நிதி தொழில்நுட்ப தலைநகராக இந்தியா சிறந்து விளங்குகிறது. நிதி தொழில்நுட்பத்தில் புதுமை, அளவு மற்றும் உள்ளடக்கத்தில் புதிய அளவுகோல்களை இந்தியா நிர்ணயித்துள்ளது.
தொழில்நுட்பம் என்பது பொது நலனுக்கானதாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் அதனை மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்....
இமாச்சல பிரதேச நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு: 20 பயணிகள் மண்ணில் புதைந்தனர்
admin - 0
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடந்த சில மாதங்களில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் கனமழை காரணமாக நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த...










