சத்தீஸ்கரில் 66 நக்சலைட்கள் சரண்: பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் மறுவாழ்வுக்கு திரும்பினர்
admin - 0
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர நக்சல் வேட்டையை தொடர்ந்து, 5 மாவட்டங்களில் நேற்று 66 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களில் 49 பேர் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நக்சல் வேட்டைக்கு என மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில...
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.3 கோடி வீடு, ரூ.66 லட்சம் சேமிப்பு: ஐஆர்எஸ் அதிகாரியின் உயில் ஒப்படைப்பு
admin - 0
ஹைதராபாத் வனஸ்தலிபுரத்தில் வசித்த ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ், ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவர். அவர் தனது இறப்புக்கு பிறகு தனது வீடு மற்றும் வங்கி சேமிப்பை ஏழுமலையானுக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார்.
இந்நிலையில் பாஸ்கர் ராவ் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது வீட்டுப் பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் உயிலின் நகலை அவரது உறவினர்கள் நேற்று திருமலைக்கு வந்து,...
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
admin - 0
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது....
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குவாஹாட்டியில் இருந்து பெங்களூரு விமானத்தில் வந்த 2 இளம்பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர்களின் பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக, 40-க்கும் மேற்பட்ட சோப்புகள் இருந்தன.
அவற்றின்...
பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் சமாஜ்வாதி கட்சி இந்துத்துவாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வரும் 2027 உ.பி. தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் தற்போதைய ஷ்ராவண மாதத்தில் சமாஜ்வாதி சார்பில் காவடி யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு முன்பாக கேதார்நாத்தில் இருப்பது போன்ற ஒரு சிவன் கோயிலை விரைந்து கட்டி முடிப்பதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இறங்கி உள்ளார். இந்த கோயில், அகிலேஷின்...
பக்தர்களின் வசதிக்காக திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்
admin - 0
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய தனி கமிட்டி...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முடங்கின.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது பஹல்காம், ஆபரேஷன் சிந்தூர், விமான விபத்து தொடர்பான விவகாரங்களை மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர். அதோடு பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் மூன்று ஏஎச்-64இ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திடம் நேற்று ஒப்படைத்தது. இந்திய விமானப் படைத் திறனை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் வரவு பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்காக, இந்திய அரசு மற்றும் போயிங் நிறுவனத்துக்கு...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டது.
இந்நிலையில், ‘‘அனைத்து போயிங் விமானங்களிலும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் அமைப்புகளை ஆய்வு செய்துவிட்டோம். இதில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை’’...
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து 12 பேர் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு
admin - 0
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து,...







