மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து மேற்கு...
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்கிளில் எவரெஸ்ட் அடிவார முகாம் (பேஸ் கேம்ப்) சென்றடைந்த முதல் இந்தியப் பெண் மற்றும் உலகின் 2வது பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 14 நாட்கள் கடினமான பயணத்துக்கு பிறகு 17,560 அடி உயரத்தில் உள்ள அடிவார முகாமை வெற்றிகரமாக சென்றடைந்தார். இந்தப் பயணத்தின்போது, அவர் மைனஸ் 12...
கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவையாக கருதப்படுகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.
பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் விற்பனையகத்தில் புடவை வாங்குவதற்காக கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் குவிந்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த முடியாததால் கடந்த 5 ஆண்டுகளாக வாடிக்கையாளர்ளுக்கு தலா...
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக வளைகுடா நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவுக்கான விமான டிக்கெட் மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொதுவாக ஐக்கிய அரசு அமீரக தலைநகர் அபுதாபி மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்திய நகரங்களுக்கு வருவதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விமான கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
போர் காரணமாக தற்போது விமான கட்டணம் ஒரு லட்சம் ரூபாய் முதல்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த இந்த நோட்டீஸில் மக்களவையின் 130 எம்பிக்கள், மாநிலங்களவையின் 63 எம்பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர். இந்த சூழலில் மக்களவை, மாநிலங்களவையில் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மக்களவை செயலாளர் உப்தல் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமைத் தேர்தல் ஆணையரை...
இந்தியக் குடும்பங்களில் விவா கரத்து என்பது இன்றும் ஒரு சமூகக் களங்கமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், தனது மகளின் விவாகரத்தை மேளதாளங்கள் முழங்க இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியான ஞானேந்திர சர்மாவின் ஒரே மகள் பிரணிதா. இவருக்கும் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றும் கவுரவ் அக்னிஹோத்ரி என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடு விதித்தது. இதனால் நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்தியா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி பெற்றன. இதனால் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 8 எரிபொருள் கப்பல்கள்...
உத்தர பிரதேச மாநிலம் ஆரையா பகுதியைச் சேர்ந்த முதியவர் ராகேஷ் யாதவ் (65). சொந்த நிலம் இல்லாத காரணத்தால் இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவரது இரு சகோதரர்களும் இறந்து விட்டனர். இவருக்கு திருமணம் ஆகாத ஒரு சகோதரி மட்டும் உள்ளார். இவரது முன்னோர்கள் வசித்த வீட்டையும், உறவினர் ஒருவருக்கு வழங்கிவிட்டு, கூடாரத்தில் ராகேஷ்யாதவ் வசித்து வருகிறார். சொந்தம், பந்தம் இல்லாமல் சோகத்துடன் வாழ்ந்து வந்த ராகேஷ் யாதவுக்கு, தான் இறந்துவிட்டால்,...
கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்? என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றால், இறைவனின் அருளால் நமது பதில் தாக்குதலை கொல்கத்தாவுக்கே கொண்டு செல்வோம். இந்த முறை நமது...
உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி
admin - 0
உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உலக நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கோவிட்19, உலக அளவில் எழுந்த பொருளாதார சவால்கள், பருவநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை உலக நாடுகள்...










