உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று மதியம் யமுனை நதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறார்கள் உட்பட 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மதுரா மாவட்ட ஆட்சியர் சி.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து சுமார் 30 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் மதுராவுக்கு வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (நேற்று) மதியம்...
மேற்கு வங்கத்தில் ஏப் 23, 29-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: மேற்கு வங்கத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். கடந்த 15 ஆண்டுகள் மேற்கு வங்க மக்களுக்கு இருண்ட...
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அப்போது, ஆம் ஜனதா உன்னயன் கட்சித் தலைவர் (ஏஜேயுபி) ஹுமாயூன் கபீருடன் பாஜக மறைமுகக் கூட்டணி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: பாஜ கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் வேறு, ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் வேறு.
மேற்கு வங்கத்தில் பாபர்...
மேற்கு வங்கத்தில் அயோத்தி பாபர் மசூதியை போன்று புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஹுமாயூன் கபீர்.
முர்ஷிதாபாத் மாவட்டம், பரத்பூர் எம்எல்ஏவான இவர், ஆம் ஜனதா உன்னயன் கட்சி (ஏஜேயுபி) என்ற புதிய கட்சியை தொடங்கினார். மேற்கு வங்க தேர்தலையொட்டி இக்கட்சியுடன் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூட்டணி வைத்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு ‘ஸ்டிங்...
மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் காங். வேட்பாளர் விலகல்: போட்டியின்றி தேர்வாகிறார் துணை முதல்வர்
admin - 0
மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) மூத்த தலைவருமாக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விமான விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் கட்சியில் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், ஆட்சியில் என்சிபி கட்சிக்கான முக்கியத்துவம் குறையாமல் இருக்கவும், அஜித் பவாரின் மனைவியும், மாநிலங்களவை எம்.பியுமான சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் துணை முதல்வராக பதவியேற்றார். அத்துடன் தேசியவாத...
மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎஃப்) படையினரின் வீரதீர தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
“சிஆர்பிஎஃப் படையினரின் வீரதீர தினத்தை முன்னிட்டு, நமது படையைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீரமிக்க வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், மரியாதைக்குரிய அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிஆர்பிஎஃப் படையினரின் வீரமும் தியாகமும் ஒவ்வொரு நாளும் நமது தேசத்தைப் பாதுகாக்கின்றன.
அதே நேரம், சிஆர்பிஎப் மற்றும் சிஏபிஎஃப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில்...
மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் 15,400 டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த கப்பல் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது.
மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. எனினும், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஈரான் அரசு இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பலை விடுவித்து வருகிறது. அந்த வகையில், இந்தியக்...
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆர்) உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பிற மாநிலங்களில் இருந்து நீதித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி, மால்டா மாவட்டத்தின் காலியாசக் மற்றும் மோதாபரி பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டிருந்த 7 நீதித்துறை அதிகாரிகளை சமூக விரோத கும்பல் ஒன்று சுற்றி வளைத்து சிறைபிடித்தது. இதில் மூன்று பெண் அதிகாரிகள் மற்றும் 5 வயது குழந்தையும் அடங்குவர். சுமார்...
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறுவதற்கான நடைமுறைகள் பலவீனமாக உள்ளன. இதனால் ஊடுருவல்காரர்கள் எளிதாக ஆதார் எண்ணை பெற்றுவிடுகின்றனர். இதை தடுக்க நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு மட்டுமே ஆதார் எண்ணை வழங்க வேண்டும். அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்படக்கூடாது.இவ்வாறு மனுவில் கோரப்பட்டு...
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரிக்க தொடங்கியுள்ளது.
2-வது நாளான நேற்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மத வழக்கங்கள் மூட நம்பிக்கையா என்பதை நீதிமன்றங்கள்...










