பிஹாரில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. கடுமையான தேர்தல் பணிகளுக்கு இடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெகுசராய் என்ற இடத்தில் உள்ளூர் மக்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன்டிபிடித்து மகிழ்ந்தார்.
படகு மூலமாக குளத்துக்குள் சென்ற ராகுல் தண்ணீரில் குதித்து நீச்சல் அடித்தார். அப்போது விகாஸ்ஷீல் கட்சியின் (விஐபி) நிறுவனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்தார்.
இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: மீனவர்கள்,...
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்து 101-ம் ஆண்டுக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ஆகியோர் இந்த கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் நாடு முழுவதிலும் இருந்து 407 பிரதிநிதிகள்...
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகரில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் 75 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அம்பேத்கர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்படாததால் பணிகளை தொடங்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு ரூ.10 கோடி...
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர். அங்கிருந்த மைனர் பெண்ணிடம் இருந்து தங்க நெக்லஸ், காதணிகள் மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை பறித்தனர். பிறகு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது தொடர்பாக பிரிங்கியா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் டேரிங்பாடி காவல் நிலையப் பகுதியை சேர்ந்த, 24...
கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், சந்தயமங்கலத்தைச் சேர்ந்தவர் சஜீர். இவர் தனது மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக கருதி தாக்கி உள்ளார். இதுகுறித்து ரெஜினா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
அதன் பிறகு, சஜீர் சூனியக்காரரை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளார். அவரது அறிவுரைப்படி, நேற்று முன்தினம் காலையில், மனைவியை தன் முன் உட்கார...
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
உத்தர பிரதேச திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021) வாராணசியில் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.250, வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதுபோல சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவுப் பொருள் வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது...
ஆந்திராவை புரட்டிப் போட்ட மோந்தா புயல்: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு
admin - 0
மோந்தா புயல் ஆந்திராவை புரட்டி போட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். வங்க கடலில் மையம் கொண்டிருந்த மோந்தா புயல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
அப்போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கோனசீமா, விசாகப்பட்டினம், விஜயநகரம், அம்பேத்கார், ஸ்ரீகாகுளம், பிரகாசம், கிருஷ்ணா, நெல்லூர், கோதாவரி...
தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம்.
தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு முறையும் ஓர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோசித்து வந்தது. பிறகு இது தொடர்பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்கும்...
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்பாளராகி உள்ளனர். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) 16 பேரும் பாஜகவின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்கின்றனர்.
இதனால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட இவர்கள்...
குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞருக்கு 1,000 துண்டுப் பிரசுரங்களை வழங்குமாறு புனே மோட்டார் வாகன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட்டின் ஹின்ஜாவாடி பகுதியில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்து போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து அவர் மீது மோட்டார் வாகன சட்டம் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு, புனே மோட்டார் வாகன நீதிமன்றம்...









