கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, வீராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து...
“தமிழக முதல்வர் விஜய் துணிச்சலாக இருக்கிறார்…” – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பாராட்டு
admin - 0
“தமிழக முதல்வர் விஜய் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் துணிச்சலாக இருக்கிறார்” என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பாராட்டினார்.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் டி.கே.சிவகுமார் பேசும்போது, “காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீரை கர்நாடகா தர வேண்டும்....
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். 8 பேரைக் காணவில்லை.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளம், நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த வயநாட்டில் கடந்த வாரம் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு...
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஷிமோகா, குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி 2,284...
நாட்டின் குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா முதலிடத்திலும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி 2-ம் இடமும் பிடித்துள்ளனர்.
மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் பிரமாணப் பத்திரங்களை பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த ஆய்வின்படி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55.24 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுடன் நாட்டிலேயே மிகக் குறைந்த சொத்துடைய முதல்வராக உள்ளார்.
நாட்டின் முதல்வர்களிலேயே மேற்கு வங்க...
கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் 7 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதியானதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் இயக்குநர் பத்மா பசவந்தப்பா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. கர்நாடகாவில் 2004-ம் ஆண்டில் இருந்து 18 முதல் 35 வயதுக்குட்பட்ட சுமார் 7000 பேருக்கு எச்ஐவி தொற்று இருக்கிறது. இதனை திரித்து, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய்...
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில், “பிவாண்டியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் நேற்றிவு 11.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 12 வீடுகள் வீதம் மொத்தம்...
மக்களவையைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து நாடு முழுவதும் மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
இதன்படி கடந்த 27-ம் தேதி மக்களவையில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 28-ம் தேதி மசோதா மீது...
வெள்ள நிவாரண பணியில் தேவையான உதவி: அருணாச்சல், நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதி
admin - 0
அருணாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால் மாநிலத்தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 19 நீர்மின் நிலையங்கள், 150 சாலைகள், 19 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
இதுபோல நாகாலாந்தில் மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மோன், திமாபூர், மோகாக்சங் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு என்எச்...
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தற்போதுள்ள, ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971’-ஐ, திருத்துவதற்கான இந்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார்.
‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ன் படி, தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்தை பாடும் கூட்டத்தை வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறு விளைவிப்பதாகவோ கண்டறியப்படும்...









