உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.
அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாம்பு விஷம் கங்கையில் மூழ்கினால் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய...
‘மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன்’ – 1993ல் போட்ட சபதத்தை 2011ல் நிறைவேற்றிய மம்தா பானர்ஜி
admin - 0
மேற்கு வங்க தலைமை செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்று 1993-ல் போட்ட சபதத்தை 2011-ல் முதல்வராக நிறைவேற்றினார் முதல்வர் மம்தா பானர்ஜி.
கடந்த 1993-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் மம்தா பானர்ஜி. மக்களவை எம்.பி.யான அவர் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். செல்லும் இடங்களிலும் அவரது பேச்சுக்கு வரவேற்பு இருந்தது. கட்சியின் ஃபயர் பிராண்ட் லீடராக அவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் 1993ம் ஆண்டு மே மாதம் மேற்கு...
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஏப்.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கம்,...
மத்திய பிரதேசத்தின் பர்ஹான்பூர் மாவட்டம் போர்சர் கிராமத்தில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாயத் துப்புரவுப் பணி என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு கிராம பஞ்சாயத்தால் ஒருமனதாக எடுக்கப்படுள்ளது.
இந்த விதிமுறை தொடர்பான சுவரொட்டிகள் கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. பொது நடத்தையை ஒழுங்குபடுத்தவும், தரக்குறைவான வார்த்தை பயன்பாட்டால் ஏற்படும் மோதல்களைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமத் துணைத் தலைவர்...
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டம், பத்நகர் தாலுகா, ஜலாரியா கிராமத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் பாகீரத் என்ற 2 வயது சிறுவன் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். சிறுவனை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "தண்ணீர் நிரம்பிய ஆழ்துளைக் கிணற்றில் 75 அடி ஆழத்தில்...
பெங்களூரு எலஹங்காவை சேர்ந்த ஹேமந்த் குமார் வெளியிட்ட வீடியோவில், ‘‘இளைஞர் ஒருவர் சாலையில் 2 மணி நேரமாக ஒரே இடத்தில் அசையாமல் நிற்கிறார். அவர் ‘சோம்பி' போதைப் பொருளை பயன்படுத்தியதால் உறைந்து போய் இருக்கிறார்’’ என கூறியிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது.
பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் உத்தரவின்படி, ‘சோம்பி’ இளைஞரைப் பிடித்து மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதில், அவர் மது அருந்தியதும் போதைப் பொருள் பயன்படுத்தாததும்...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று மதியம் யமுனை நதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறார்கள் உட்பட 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மதுரா மாவட்ட ஆட்சியர் சி.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து சுமார் 30 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் மதுராவுக்கு வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (நேற்று) மதியம்...
மேற்கு வங்கத்தில் ஏப் 23, 29-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: மேற்கு வங்கத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். கடந்த 15 ஆண்டுகள் மேற்கு வங்க மக்களுக்கு இருண்ட...
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அப்போது, ஆம் ஜனதா உன்னயன் கட்சித் தலைவர் (ஏஜேயுபி) ஹுமாயூன் கபீருடன் பாஜக மறைமுகக் கூட்டணி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: பாஜ கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் வேறு, ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் வேறு.
மேற்கு வங்கத்தில் பாபர்...
மேற்கு வங்கத்தில் அயோத்தி பாபர் மசூதியை போன்று புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஹுமாயூன் கபீர்.
முர்ஷிதாபாத் மாவட்டம், பரத்பூர் எம்எல்ஏவான இவர், ஆம் ஜனதா உன்னயன் கட்சி (ஏஜேயுபி) என்ற புதிய கட்சியை தொடங்கினார். மேற்கு வங்க தேர்தலையொட்டி இக்கட்சியுடன் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூட்டணி வைத்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு ‘ஸ்டிங்...










