சத்தீஸ்கரில் 54 போலீஸாரை கொன்ற, 226 வழக்குகள் உள்ள மாவோயிஸ்ட் தலைவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
admin - 0
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்ட காருண்யா வளப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் முகாம் அமைத்து செயல்படுகின்றனர். அடர்ந்த வனப் பகுதி, மலைகள் என யாரும் எளிதில் செல்ல முடியாத நிலப்பரப்பு என்பதால், மக்கள் விடுதலை கொரில்லா படை (பிஎல்ஜிஏ) என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டு வந்தனர்.
மேலும், சத்தீஸ்கரின் அபுஜ்மார் என்ற அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தலைமை அலுவலகமும் செயல்பட்டு வந்தது. மத்தியில் பாஜக வந்த பிறகு மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் ஒடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது....
சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் உட்பட 7 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
admin - 0
சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் செயில் உட்பட 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுவதாகவும் அவை பெலகேரி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், பெலகேரி துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல டன் இரும்புத் தாதுவை அதிகாரிகள்...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவை அதிகரிக்கும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இணைகிறார்.
இது குறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலம்...
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு ஜிகாத்' வெற்றி பெறாது என்று அந்த மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னா விஸ் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத...
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி எச்சரிக்கை
admin - 0
அரசு அதிகாரிகள் போல நடித்து, தனிப்பட்ட நபர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு போலியாக மிரட்டல் விடுக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில்,...
டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (திங்கள்கிழமை) மிக மோசமாக இருக்கிறது. தலைநகர் டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக அறியப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (அக்.28) மிக மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேர சராசரியின்படி இன்று காலை 6 மணியளவில் டெல்லியில் காற்றின்...
எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கான பெயர் பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த நடைமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அவர்களின் வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு அளிக்கும் 'ஆயுஷ்மான் பாரத் - பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா' திட்டத்துக்கு...
குஜராத்தின் அகமதாபாத் நகரில் போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் நாட்டின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு போலி ஆதார் அட்டைகள், பான் அட்டைகளை ஒரு கும்பல் வழங்கி வருகிறது. இவ்வாறு போலி ஆவணங்களுடன் இந்தியாவில் பல இடங்களில் தங்கியிருக்கும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். புனே அருகில் உள்ள...
மகாராஷ்டிர தேர்தலில் முக்கிய திருப்பமாக வோர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேவை எதிர்த்து சிவசேனா சார்பில் மிலிந்த் தியோரா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக அறியப்பட்ட மிலிந்த் தியோரா மனக்கசப்பின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அவருக்கு மும்பை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வைப்பதென கட்சி மேலிடம் முடிவெடுத்தது.
சிவசேனா (யுபிடி) கட்சியின்...
வங்கக் கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் கரையைக் கடந்தது. இந்த புயலின் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த 19-ம் தேதி வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, பின்னர் புயலாக மாறியது. டானா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் ஒடிசாவின் புரி மாவட்டம், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு இடையே வியாழக்கிழமை நள்ளிரவு முதல் கரையைக் கடக்கும் என்று...









