வரலாற்றை மதிக்காவிட்டால் சிறந்த எதிர்காலம் இல்லை: வந்தே மாதரம் சர்ச்சை பற்றி சத்குரு கருத்து
admin - 0
தனது வரலாற்றை மதிக்காத எந்தவொரு நாடும் தனக்கென ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறினார்.
வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதம் பற்றி காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறியதாவது: நமக்கு புத்திசாலித்தனம் இருக்கலாம், திறமை இருக்கலாம், வளங்கள் இருக்கலாம், நாகரிக வரலாறு ஏராளமாக...
அயோத்தியில் 6 ஆண்டுகளாகியும் பாபர் மசூதி கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. வடிவமைமைப்பு முடிவாகாதது, நிதி வசூலில் சுணக்கம் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன.
உத்தரபிரதேசம், அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு நவ. 19, 2019-ல் வெளியானது.
இதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி...
இண்டிகோ விமான சேவை முடங்கியபோது பிற நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது எப்படி? – ஐகோர்ட்
admin - 0
இண்டிகோ விமான சேவை முடங்கியபோது பிற நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது எப்படி என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர விதிகள் (எப்டிடிஎல்) காரணமாக, நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடந்த வாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு தலையிட்டதையடுத்து நிலைமை சீரடைந்து வருகிறது. எனினும், 9-வது நாளான நேற்றும் பல விமானங்கள்...
கரோனா காலத்தில் ஆப் மூலம் ரூ.1,000 கோடி முதலீட்டு மோசடி – 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு
admin - 0
கரோனா பேரிடரின்போது செல்போன் செயலி மூலம் ரூ.1,000 கோடி சுருட்டிய வழக்கில் 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் நேற்று கூறியதாவது: கரோனா பொதுமுடக்கத்தின் போது ”எச்பிஇசட் டோக்கன்ஸ்” என்ற போலியான செல்போன் செயலியைப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து ரூ.1,000 கோடி திரட்டப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி மற்றும் அதிக வட்டி தருவதாக கூறி இந்த மோசடி நடைபெற்றது.
வெளிநாட்டைச் சேர்ந்த பெரிய கும்பல் சைபர் கிரைம்...
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு மாதம் ஒருநாள் ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அம்மாநில அரசு...
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் உள்ளனவா என்பது குறித்து கோயில் நிர்வாகத்தினர் பக்தர்களிடையே கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் நிறை, குறைகளை ஆராய்ந்து சரி செய்ய வேண்டுமென முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி சேவகர்கள்...
இண்டிகோ விமான சேவை 8-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று வரவேண்டிய 14 விமானங்கள், புறப்பட வேண்டிய 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோன்று விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு செல்ல வேண்டிய 6 இண்டிகோ விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நாடு முழுவதும் கூடுதலாக 100 விமானங்களை...
தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் (முன்பு ஆந்திரா வங்கி) வாங்கிய ரூ.228 கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி, இந்தக் கடனை வாராக் கடனாக வகைப்படுத்தியது. மேலும் இது...
கோவாவின் அர்போரா கிராமத்தில் 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக 3 அதிகாரிகளை கோவா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கியது.
தீ விபத்தை தொடர்ந்து தாய்லாந்து தப்பிச் சென்ற கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா (40),...
நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத் இ உலாமா ஹிந்த் அமைப்பின் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பாவது:
வந்தே மாதரம் பாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் அல்லாவை மட்டுமே வணங்குகிறார்கள். அல்லாவைத் தவிர வேறு யாரையும் எங்கள் வழிபாட்டில் சேர்க்க முடியாது. வந்தே மாதரத்தின் மொழிபெயர்ப்பு ஷிர்க் (பாவம்) தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாகக்...
