மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை. குறிப்பாக சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது என கூறியிருந்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறும்போது, “ராகுல் கருத்து மோசமானது. வெளிநாட்டில் இந்தியாவை பற்றி ஆபத்தான கதைகளை பரப்பி வருகிறார்” என்றார். இந்நிலையில்,...
ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை புல்டோசர் மூலம் அழிக்க விடாமல் பாட்டில்களை அள்ளிய பொதுமக்கள்: வீடியோ வைரல்
admin - 0
பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை சாலையில் கொட்டி, புல்டோசர் மூலம் அழிக்க முயன்றபோது பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது ஆந்திராவில் வைரல் ஆகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான பாட்டில்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபானபாட்டில்களையும்...
பாஜக அலுவலகத்தை குறிவைத்த தீவிரவாதிகள்: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
admin - 0
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள், முதலில் பாஜக அலுவலகத்தை குறிவைத்தனர் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டுவெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதத்துக்கும் மேலாக விசாரணை...
டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி பொறியாளரின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.2.39 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டியில் சுற்றுச்சூழல் முதுநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் முகம்மது ஆரிப். இவர் ரூ.91 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகங்களில் சிபிஐசோதனை நடத்தியது. இதில் ரூ.2.39 கோடி ரொக்கமும் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் முகம்மது...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் 1,800 ஏக்கர் நிலத்தை அபகரித்த மாபியா கும்பல்: அமலாக்கத் துறை கண்டுபிடிப்பு
admin - 0
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் 1,800 ஏக்கர் நிலங்களை, போலி ஆவணங்கள் மூலம்மாபியா கும்பல் அபகரித்துள்ளதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.3,000 கோடி எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சோட்டா நாக்பூர் குத்தகை (சிஎன்டி) சட்டத்தின் கீழ், வனப்பகுதி நிலங்கள் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் விற்க முடியாத பிரிவின் கீழ் உள்ளன. ஆனால், இந்த நிலங்களை எல்லாம் மாபியா கும்பல் அபகரித்துவிட்டதாக அமலாக்கத்துறைக்கு பல புகார்கள் சென்றன. இதையடுத்து இந்த...
பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முற்காலத்துக்கு செல்லும் தொழில்நுட்பம் ஏதேனும் இருக்குமானால் ராகுல் காந்தி தனது பாட்டியிடம் சென்று ஆர்எஸ்எஸ் பங்கு பற்றி கேட்டறிய வேண்டும்.
ஆர்எஸ்எஸ் பற்றி அறிய ராகுல் பல பிறவிகள் எடுக்க வேண்டும். ஒரு துரோகியால் ஆர்எஸ்எஸ் பற்றி அறிந்துகொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ்ஸை அறிய முடியாது. இந்தியாவின் புகழை கெடுக்கவே ராகுல்...
மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேர வைக்கு அக்.5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது.
இது தொடர்பாக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையில் இதுவரை 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கூட்டணி தொடர்பாக இதுவரை சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் 20 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது. இதில்...
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதியை உச்ச நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை ஐஎம்ஏ-வுக்கு உள்ளது. எனவே இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கைகளில் விட்டுவிடுவோம். பெண் மருத்துவர் கொலைவழக்கு விவகாரத்தை விசாரிக்கதேசிய அளவிலான பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.
எனவே, ஒட்டுமொத்த மருத்துவ சமூகமும் உச்ச நீதிமன்றத்தை நம்ப வேண்டும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்...
மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் சட்ட ஆணையம் இயங்குகிறது. இதன் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படும் சட்ட ஆணைய குழு, சட்ட சீர்திருத்தங்கள் குறித்துஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைசெய்து வருகிறது. அந்த வகையில் 22-வது சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி 23-வது சட்ட ஆணைய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், இந்தக் குழுவின்ஆய்வு வரம்பில் பொது சிவில்...
இமாச்சல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சுதிர் சர்மா, ரவி தாகூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லக்கன்பால், சேதன்யா சர்மா மற்றும் தேவேந்தர் குமார் ஆகியோர் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மேலும் சட்டப்பேரவையில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட போதும், இவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தனர். இதனால் இவர்கள் கட்சி தாவல் தடை...










