Google search engine
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள24 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி...
ஒடிசா அரசின் சுபத்ரா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 25 லட்சம்பெண்களுக்கான நிதியுதவியை அவர் வழங்கினார். சமீபத்தில் நடந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றார். ஒடிசா தேர்தலின்போது, பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் 5 ஆண்டுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சுபத்ரா என்று பெயரிடப்பட்ட இந்த...
020-ம் ஆண்டு டெல்லி கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டஆதிஷி தற்போது டெல்லி முதல்வராகி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியதில் ஆதிஷிக்கு முக்கிய பங்கு உண்டு. நெருக்கடியான அந்த காலகட்டங்களில் அவரின் செயல்பாடு பலரின் பாராட்டை பெற்றது. பல முக்கிய துறைகளை வைத்துக்கொண்டு...
 நாடாளுமன்ற மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில் இந்த திட்டத்தை வலியுறுத்தி இருந்தார். அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில் ஒரே...
காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் பொம்மைகள் என அவாமி இட்டிஹாட் கட்சி (ஏஐபி) எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் விமர்சித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த இட்டிஹாட் கட்சி (ஏஐபி) எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின்...
அனைத்து மருத்துவர்களுக்கும் ஆதாரைப் போல தனிப்பட்ட எண்ணுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)அதற்கான பதிவை தொடங்கியுள்ளது. தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை மத்தியசுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய சுகாதார பதிவேடு திட்டம் என்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இது, டிஜிட்டல் ஹெல்த்கேர் சூழலை வலுப்படுத்தும் என்பதுடன் இந்திய மக்களுக்கு தரமான...
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் அமைந்துள்ள சஞ்சாலி என்றபகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இதன் அருகே அரசு நிலம் உள்ளது. இந்நிலையில் மசூதியின் சுற்றுச்சுவர் விரிவுபடுத்தப்பட்டது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து மசூதியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதை இடிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் கடந்த 11-ம் தேதிபோராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது போராட்டக்...
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க காவல் துறையினரே ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக கட்சியைச் சேர்ந்த அம்மாநில எதிர்க் கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித் துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “தற்போது தாலா போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. இதன் மூலம் இவ்வழக்கில் கொல்கத்தா காவல்...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், ஒகேனக்கல்லில் அருவிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தருமபுரி மாவட்ட...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவர் அளித்த இஃப்தார் விருந்து புகைப்படத்தை பாஜக பகிர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த புதன்கிழமை டெல்லியில் உள்ள தனது வீட்டில் விநாயகர் பூஜை நடத்தினார். இந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு...