ரூ.2.5 கோடி ரொக்கம், ரூ.75 லட்சம் கார் வரதட்தணையுடன் மீரட் நகரில் நடைபெற்ற கோலாகல திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள ரெசார்ட் ஒன்றில் அண்மையில் ஆடம்பரத் திருமணம் நடைபெற்றது. இது முஸ்லிம் மதத்தினரின் திருமணமாகும். இந்தத் திருமணத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது. ரெசார்ட் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்தேறியது. மேலும் மணமகன் வீட்டாருக்கு ரூ.2.5 கோடி ரொக்கம் அடங்கிய...
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள...
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு சென்னைஎம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரி்த்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது,இதற்கிடையே, இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் தாக்கல் செய்திருந்த மனு...
மகாராஷ்டிர புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். அவரது தந்தை கங்காதர் ராவ் ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர் ஆவார். தற்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பட்னாவிஸின் தந்தை கங்காதர் ராவின் ஆதரவுடன் பாஜகவில் வளர்ந்தவர். அவரது மறைவுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் அரசியலில் கால் பதித்தார். ஆரம்ப காலத்தில் அவர் நிதின் கட்கரியின் ஆதரவாளராகவே இருந்தார். மகாராஷ்டிர பாஜகவில் நிதின் கட்கரிக்கு...
தேவேந்திர பட்னா​விஸ் வழக்​கறிஞராக​வும் ஆர்.எஸ்​.எஸ். உறுப்​பின​ராக​வும் பயிற்சி பெற்றவர். தனது புத்​திசாலித்​தனம் மற்றும் கூர்​மையான விவாத திறன்​களுக்காக நற்பெயர் பெற்​றார். நாக்​பூர் தென்​மேற்கு சட்டப்​பேர​வைத் தொகு​தி​யில் தொடர்ச்​சியாக 6 முறை வெற்றி பெற்றுள்​ளார். தேவேந்திர பட்னா​விஸ் (54) இளம் வயதில், தனது தந்தையை சிறை​யில் அடைத்த முன்​னாள் பிரதமர் இந்திரா காந்​தி​யின் பெயரைக் கொண்ட (இந்திரா கான்​வென்ட்) பள்ளி​யில் படிப்​பைத் தொடர மறுத்து விட்​டார். அதன் பிறகு சரஸ்வதி வித்​யால​யா​வில்...
கடந்த நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. ஆனால் புதிய அரசு பதவியேற்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னணி காரணங்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: பாஜக கூட்டணியில் பாஜக மட்டும் 132, ஷிண்டேவின் சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41...
நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணி செல்ல இருப்பதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து டெல்லி - ஹரியானா எல்லை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்....
பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்த அம்பேத்கர் சட்ட மேதை, பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டிருந்தார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராக விளங்கியவர். பட்டியல் சமூகத்தில் பிறந்தவரான அம்பேத்கர்,...
டிக்கெட்களுக்கான ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியத்தை ரயில்வே வழங்குகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு ரயில் டிக்கெட் 100 ரூபாய் என்றால் பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் 54 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. மீதமுள்ள 46 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் அனைத்து வகுப்பு...
ராணுவத்தில் ரூ.21,772 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் 5 நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது. கடற்படை பயன்பாட்டுக்கு 31 வாட்டர் ஜெட் அதிவேக படகுகள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சில் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த அதிவேக படகுகள் மூலம் கடற்கரை பகுதிகளில் ரோந்து, கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கொள்ளை தடுப்பு பணிகளுக்கும் இந்த விரைவுப் படகுகள் ஈடுபடுத்தப்படும்....