Google search engine
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள். நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுபடுத்த பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பை காக்க காங்கிரஸ் விரும்புகிறது. தொழிலதிபர்கள் ஆதாயம் அடைய பிரதமர் மோடி உதவுகிறார். நாங்கள் மோடி அரசை...
பிஹார் மாநிலம் பரவுனி ஜங்ஷனை நவம்பர் 9-ம் தேதி காலை 8.10 மணிக்கு லக்னோ-பரவுனி ரயில் வந்தடைந்தது. அப்போது, பாயிண்ட்மேன் முகமது சுலைமான் மற்றும் அமர் குமார் ராவ் இன்ஜினை தனியாக பிரிப்பதற்காக சென்றுள்ளனர். இந்த பணியின்போது, ரயில் ஓட்டுநருக்கு தவறான சமிக்ஞை வழங்கப்பட்டதால் இன்ஜினுக்கும் பவர் காருக்கும் இடையில் நசுங்கி அமர் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து பதற்றமடைந்த ரயில் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, இரண்டு...
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடப்பாண்டில் இதுவரை 200 ட்ரோன்கள் பிடிபட்டன என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை காவல் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள், போதைபொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) சார்பில்பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேர்தல் அறிக் கையை நேற்று வெளியிட்டு பேசியதாவது: பால் தாக்கரேவையும் வீர் சாவர்க்கரையும் அவமரியாதை செய்து வரும் காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்துள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு நான் சவால் விடுகிறேன். வீர் சாவர்க்கரைப் பற்றி ஒரு சில நல்ல வார்த்தைகளை ராகுல் காந்தி பேசுவாரா என்று உத்தவ் தாக்கரே கேட்டுப் பார்க்கட்டும். பால் தாக்கரேவைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள்...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இக்கோயிலில் ராமர் குழந்தை வடிவமாக (ராம் லல்லா) காட்சியளிக்கிறார். அவருக்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடைகளை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குளிர்காலத்தின் அகான் மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதம் முதல் குழந்தை ராமரை கதகதப்பாக வைக்கும் வகையில் க்வில்ட்ஸ், பஷ்மினா சால்வைகள் மற்றும்இதர டிசைனர் உடைகளைஉடுத்த முடிவு செய்யப்பட்டுள்...
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம்-3, வரும் ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெறுகிறது. பிரயாக்ராஜின் கும்பமேளாவை தமிழர்கள் காணும் வகையில் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது. உ.பி.யின் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த ‘காசி தமிழ் சங்கமம் 2022 இல் துவக்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இந்த சங்கமம் பிரதமர் நரேந்திர மோடியின் உருவாக்கமாக இருந்தது. இதனால், தனது மக்களவை...
மணிப்பூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் சைடோன் கிராமத்தில் உள்ள வயலில் சுமார் 20 பெண்கள் நேற்று முன்தினம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் சபம் சோபியா (27) என்ற பெண்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பேரணியில் அரசியல் சாசன வெற்று நகலை விநியோகம் செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு கடுமையான அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெக்சாத் பூனாவாலா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மநிலம் நாக்பூர் நகரத்தில் ராகுல் காந்தி நடத்திய அரசியலமைப்பு சாசன மரியாதை மாநாட்டில் வெற்று நகல் புத்தகம் விநியோகிக்கப்பட்டது. இது, அக்கட்சியின் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின்...
பெங்களூருவில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்த விழுந்த நிலையில், நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி 50 பேரின் உயிரை காப்பாற்றினார். பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் ஜி 11 பேருந்து நேற்று யஷ்வந்த்பூரில் இருந்து நெலமங்களாவுக்கு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் கிரண் குமார் (32) அந்த பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு, தனது இருக்கையில் இருந்து சரிந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக பிஆர். நாயுடு தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது. இதில் நேற்று முன் தினம் புதன் கிழமை அறங்காவலர் குழு தலைவராக பிஆர். நாயுடு உட்பட 15 பேர் திருமலையில் ஏழுமலையான் முன்பு பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று ஹைதராபாத் பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனரான சுசித்ரா எல்லா, ஆந்திர மாநில...