முனம்பம் வக்பு நிலப் பிரச்சினைக்கு கேரள அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தினார். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள முனம்பம், சேரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 404 ஏக்கர் நிலத்துக்கு கேரள மாநில வக்பு வாரியம் உரிமை கோருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் நிலவரி...
ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் ​போம் என்று உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் அறிவுறுத்தி உள்ளனர். விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்ளி​வைத்​த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்​கில் இறுதி விசாரணை நடைபெறும் என்று திட்​ட​வட்​டமாக தெரி​வித்​தனர். தமிழக ஆளுநராக ஆர்.என்​.ரவி கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். அப்போ​திருந்தே, தமிழக அரசுக்​கும், அவருக்​கும் மோதல் போக்கு...
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,...
இண்டியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற ஊகத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், “இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது தேசிய பிரச்சினை மற்றும் மக்களவைத்...
இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் “தவறான தகவலை தெரிவித்தமைக்காக எனது குழு மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப உள்ளது. எந்தவொரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவலும்...
மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதலாவது அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி "மகா கும்பமேளாவில் பக்தி, ஆன்மீகம் ஆகியவற்றின் அற்புதமான சங்கமம். மகர சங்கராந்தியை முன்னிட்டு மகாகும்பமேளாவில் முதல் அமிர்தக் குளியலில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவில் மகர சங்கராந்தி: குளிர்காலத்தின்...
டெல்லி பாரத மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 'மிஷன் மௌசம்' எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 'ஐஎம்டி விஷன்-2047' ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். மேலும் நிகழ்ச்சியின் போது நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய...
காஷ்மீரின் சோனமார்க் பகுதியில் புதிய சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், “நான் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று உறுதி அளித்தார். காஷ்மீரில் இருந்து லடாக் எல்லைக்கு சோனமார்க் மலைப்பாதை வழியாக கடந்து செல்ல வேண்டும். பனிச்சரிவு, நிலச்சரிவு காரணமாக சோனமார்க் மலைப் பாதை பல மாதங்கள் மூடப்பட்டிருக்கும். எனவே குளிர், மழைக்காலங்களில் லடாக் எல்லையில் முகாமிட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு விமானங்கள்...
4 குழந்தைகளைப் பெறும் இளம் பிராமண தம்பதிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பண்டிட் விஷ்ணு ரஜோரியா பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வருகிறார். இது மாநில அமைச்சருக்கு நிகரான பதவியாகும். இந்நிலையில் போபாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசியதாவது: நாம் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை...
அமெரிக்​கா​வின் தாமஸ் மெர்​ரிட் நால்ஸ் என்பவரின் மகனாகப் பிறந்​தவர் வைஸானந்த் கிரி. தனது 15 வயதில் ஆதி சங்கராச்​சா​ரி​யாரின் கொள்கைகளால் வைஸானந்த் ஈர்க்​கப்​பட்​டார். பிறகு, நிரஞ்சனி அகாடா​வின் வாராணசி மடத்​தின் மகரிஷி மகேஷ் யோகி​யின் தொடர்​பில் வந்தார். பின்னர் அவரது பெயர் வைஸானந்த் கிரி என மாற்​றப்​பட்​டது. அதன்​பின் இந்து மதக் கொள்​கைகளை பின்பற்றி, யோகாகலை நிபுணரானார். கடந்த 2013-ல் பிரயாக்​ராஜின் கும்​பமேளா​வில் நிரஞ்சனி அகாடா​வில் இணைந்​தவர் அதன் தலைவர்...