பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: 16 மசோதாக்கள் தாக்கல் ஆகின்றன
admin - 0
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது....
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 30 போலீஸார் காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இன்று (நவ.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிகப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில்...
கூட்டுறவுத் துறை பொருளாதார ரீதியாக தனிநபர்களை வளப்படுத்துவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பிரதான நீரோட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. மூலதனம் இல்லாத அல்லது சிறியளவில் சேமிப்பை மட்டுமே கொண்டுள்ள மக்களை மேம்படுத்துவதற்கான சிறந்த கருவியாக கூட்டுறவு இயக்கம் உள்ளது.
2021-ம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், தேசிய அளவில் கூட்டுறவுக்கென பிரத்யேக அமைச்சகம் உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் இந்தத் துறையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கூட்டுறவுத் துறையிலும்...
தலைநகர் டெல்லி கடுமையான காற்று மாசால் திணறி வருகிறது. இந்த நிலையில், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியை சுற்றியுள்ள மாநிலங்களில், மாசு கட்டுப்பாட்டுக்கான "கிராப்" 4 விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க உச்ச நீதிமன்றம் நவம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டது. எக்காரணத்தைக் கொண்டும் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைவதாக புகார் எழுந்தது....
இந்திய கடற்படையின் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்று, மீன்பிடி படகு ஒன்றின் மீது மோதியதில் 2 மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் விமானம் ஈடுபட்டுள்ளது.
இந்திய கடற்படையில் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பல நவீன அம்சங்கள் உள்ளன. கடலின் மேற்பரப்பில் இருந்தும், கடலுக்கும் அடியில் இருந்தும் இந்த கப்பல் மூலம் டார்பிடோ உட்பட...
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் பக்தர்களின் புனித யாத்திரைக்கு பிறகு 1.5 டன் குப்பைகளை நகர பஞ்சாயத்து அகற்றியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அப்போது இக்கோயில்கள் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த 4 கோயில்களுக்கும் பக்தர்கள் சென்று வரும் யாத்திரை சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான...
மகா கும்பமேளாவுக்கு 3,000 சிறப்பு ரயில்கள்: சென்னை, கன்னியாகுமரியில் இருந்தும் புறப்படுகின்றன
admin - 0
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் தொடங்கும் மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
உ.பி.யின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 2025 ஜனவரியில் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.
இதையொட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, விரிவான ஏற்பாடுகளை...
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் அமைதியை ஏற்படுத்துவதற்காக கூடுதலாக 10,000 வீரர்களை மத்திய அரசு அனுப்பவுள்ளது.
மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவரிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. மோதல் ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. குகி மற்றும் மைதேயி இனத்தை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 11-ம்...
வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறியதைத் தொடர்ந்து ரூ.100 கோடி கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக பொதுமக்களுக்கு வினோத் தாவ்டே பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. பல்கார் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், வாக்காளர்களுக்கு வினோத்...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மதியத்துக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி)...










