Google search engine
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உலகளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த கும்பமேளாவில் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில்...
இந்தியாவுக்கு எதிராக போர் என கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது பிஹார்வாசி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் கடந்த 15-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்” என்றார். இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள...
ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து குவாஹாட்டி ரயில் நிலையத்தில் அப்பெண்ணுக்கு ரயில்வே மருத்துவர்கள், ஆர்பிஎப் பெண் காவலர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதுகுறித்து வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே செய்தித் தொடர்பாளர் கபின்ஜல் கிஷோர் சர்மா நேற்று கூறியதாவது: திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து ராணி கமலாபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பணி பெண் ஒருவர் திங்கட்கிழமை பயணம் செய்தார். பிஹார் மாநிலத்தின் பிரவ்னிக்கு...
டெல்லியில் மழலையர் கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் முக்கிய கட்சிகளான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்றும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன, பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. பாஜக தனது...
கொல்​கத்​தா​வில் பெண் மருத்​துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்​கில், சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்​டும் என்று கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மேற்​கு​வங்க அரசு மேல்​முறை​யீடு செய்​துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் உள்ள ஆர்ஜி கர் மருத்​துவ​மனை​யில் பணியில் இருந்த பெண் மருத்​துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்​லப்​பட்​டார். இதுதொடர்பாக தன்னார்​வலரான சஞ்சய் ராய் கைது செய்​யப்​பட்​டார். ஆனால், இந்த கொடுமைக்கு பின்னணி​யில் பலர் இருப்​பதாக...
பெங்களூருவை சேர்ந்த முதியவருக்கு இலவசமாக செல்போன் அனுப்பி, அதன் மூலம் ரூ.2.8 கோடியை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் ஜே.எம்.ராய் (61). ஐடி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு கடந்த நவம்பரில் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு பண பரிவர்த்தனையின் அடிப்படையில், இலவச கிரெடிட் கார்ட் மற்றும் ரூ.10 ஆயிரம்...
திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கு அரசர் காலம் முதலே அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கியதோடு, அவர் கள் வீடு திரும்பும் வரை பூந்தி, வடை போன்றவற்றையும் கோயில் சார்பில் வழங்கி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 1983-ம் ஆண்டு என்.டி.ராமா ராவ் முதல்வரான பின்னர், பக்தர்கள் உண்டியலில்...
நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் வங்கதேசத்தில் இருந்து நதியை நீந்தி கடந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்துக்குள் ஊடுருவி உள்ளார் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 15-ம் தேதி இரவு மும்பையில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். அந்த நபர், நடிகர் சயீபை கத்தியால் பலமுறை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கடந்த 19-ம் தேதி மகாராஷ்டிராவின் தானே பகுதியில்...
சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதத்தை அழிக்க மாநில காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த படையில் 3,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். சத்தீஸ்கர் காவல் துறையின் டிஆர்ஜி படை மற்றும் மத்திய அரசின் சிஆர்பிஎப் படையை சேர்ந்த 1,000 வீரர்கள் கடந்த சில மாதங்களாக சத்தீஸ்கர் வனப்பகுதிகளில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் தீவிரவாதிகளின்...
வாரிசு பட தயாரிப்​பாளர் தில்​ராஜு​வின் வீடு மற்றும் அலுவல​கங்கள் என மொத்தம் 8 இடங்​களில் 55 வருமான வரித் துறை அதிகாரிகள் குழு​வினர் சோதனை​யில் ஈடுபட்​டுள்​ளனர். நடிகர் விஜய் நடித்த வாரிசு, ஷங்கர் இயக்​கத்​தில் ராம்​சரண் நடித்த கேம் சேஞ்​சர், நடிகர் வெங்​கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி ஆகியோர் இணைந்து நடித்த ‘சங்​க​ராந்​திக்கு ஒஸ்தானு' உள்ளிட்ட படங்​களின் தயாரிப்​பாள​ரும், தெலங்​கானா மாநில திரைப்பட மேம்​பாட்டுக் கழகத் தலைவருமான தில்​ராஜு​வின் வீடு...