மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி கண்டது. அந்த கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 48 இடங்களில் வெற்றி கண்ட பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர்...
பிரயாக்ராஜ் நகரில் கடந்த 45 நாட்களாக நடைபெற்ற சிவராத்திரி புனித குளியலுடன் மகா கும்பமேளா நேற்று முடிவடைந்தது. இதையடுத்து பிரயாக்ராஜ் நகரம் இயல்புநிலைக்கு திரும்புகிறது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, தினமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பல்வேறு அகாராக்களைச் சேர்ந்த துறவிகள்...
தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிப்பதே போதுமானது என்றும் வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து...
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த சஞ்சய் சரோகி, சுனில் குமார், ஜிபேஷ் மிஸ்ரா, மோதிலால் பிரசாத், கிருஷ்ண குமார் மந்தூ, ராஜுகுமார் சிங், விஜய் குமார் மண்டல் ஆகிய 7 எம்எல்ஏக்கள் நேற்று கேபினட்...
ரயில் பயணிகள் மீது ஜன்னல் வழியாக தண்ணீர் ஊற்றிய நபர் போலீஸாரிடம் சிக்கினார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. ரயில் பயணிகளிடம் சிலர் அத்து மீறும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில்கள் சேதப்படுத்தப்பட்டது, பயணிகளிடம் சிலர் அத்து மீறிய வீடியோ காட்சிகள் வைரலாக பரவின. இந்நிலையில் ரயில்வே நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர், நகர்ந்து சென்று கொண்டிருக்கும் ரயிலின் ஜன்னல் வழியாக பயணிகள்...
மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோதாவரி ஆற்றில் நேற்று அதிகாலை புனித நீராட சென்ற 5 வாலிபர்கள் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கொவ்வூரு, தாள்ளபூடி மற்றும் ராஜமுந்திரி பகுதிகளை சேர்ந்த சுமார் 11 வாலிபர்கள், சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அதிகாலை தாடிபூடி எனும் இடத்தில் கோதாவரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற துர்கா பிரசாத் (19), சாய்கிருஷ்ணா (19),...
தெலங்கானாவில் வரும் 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் மாலை தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தெலங்கானாவுக்கு வரவேண்டிய நிதி மற்றும் மாநிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் பேசினார். நாகர் கர்னூலில் குடிநீர் திட்ட சுரங்கத்தில்...
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள தர்காவுக்குள் சிவலிங்க பூஜை செய்ய அம்மாநில‌ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று இந்து அமைப்பினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவலிங்க பூஜை செய்து வழிபட்டனர். கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் ஆலந்து பகுதியில் லட்லே மஷாக் என்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. சூஃபி துறவி லட்லே மஷாக்கின் நினைவிடம் அமைந்துள்ள இந்த தர்காவில் இந்து துறவி ராகவ சைதன்யாவின் சமாதியும் அமைந்துள்ளது. இந்த...
கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறியுள்ளதாவது: கடந்த 2023-24-ம் நிதியாண்டில் நீதிமன்ற வழக்குகளுக்காக ரூ.66 கோடியை மத்திய அரசு செலவழித்துள்ளது. கடந்த 2022-23-ம் நிதியாண்டை விட இது ரூ.9 கோடி அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நீதிமன்ற வழக்குகளுக்காக ரூ.409 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு செலவு செய்துள்ளது. 2014-15-ம் நிதியாண்டில் ரூ.26.64...
குடிபோதையில் மணமகளுக்குப் பதிலாக மணமகளின் தோழனுக்கு மாலையை மணமகன் அணிவித்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அண்மையில் நடைபெற்ற திருமணம் தொடர்பான வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி. மாநிலம் கியோல்டியா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் இந்த திருமணம் கடந்த 22-ம் தேதி நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோவில், திருமணத்தின்போது மேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க,...