கலவரங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மணிப்பூர் மாநிலத்தில் 104 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட காங்போக்பி, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தவுபால், இம்பால் மேற்கு மற்றும் காக் சிங் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 104 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆயுதங்களை திரும்ப...
டெல்லி சட்டப்பேரவை வளாகத்துக்குள் நேற்று நுழைந்த ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை கடந்த செவ்வாய் கிழமை அன்று தொடங்கியது. அப்போது முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படம் அகற்றப்பட்டதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் உரையின் போது ஜெய் பிம் என கோஷம் எழுப்பினர். இதனால் ஆம் ஆத்மி எம்எல்ஏ,.க்கள் 21...
போபால் விஷ வாயு விபத்து நடந்த இடத்திலிருந்து நச்சுக்கழிவுகளை அழிப்பது தொடர்பான மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு விஷ வாயு கசிவு ஏற்பட்டதில் 5,479 பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இது உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை...
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்று விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். அப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடியின் பிஏ, எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதனிடையே ஆம் ஆத்மி நிர்வாகி...
அசாமின் மத்திய பகுதியில் நேற்று அதிகாலை 2:25 மணிக்கு 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். மத்திய அசாமில் பிரம்மபுத்ரா தெற்கு கரையில் உள்ள மோரிகாவ்ன் மாவட்டத்தில் (குவாஹாட்டிக்கு கிழக்கே 52 கி.மீ. தொலைவில்) 16 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை மாவட்டங்களிலும் பிரம்மபுத்ராவின் வடக்கு கரையில் உள்ள பல்வேறு இடங்களிலும் நன்கு உணரப்பட்டது. மேலும் மேற்கு வங்கம்,...
மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 25-ம் தேதி அதிகாலையில் மகாராஷ்டிராவின் புனே நகர் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண், சதாரா செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர், எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளார். அந்த பெண், சதாரா மாவட்டத்தின் பால்தானுக்கு செல்ல வேண்டும் என்று...
கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மதிய உணவுக்கு பிறகு எம்எல்ஏக்கள் தூங்குவதற்கு சென்று விடுகின்றனர். இதனை தடுக்க பேரவை வளாகத்திலேயே குட்டி தூக்கம் போடுவதற்கு ஏதுவாக ரிக்லைனர்களை ஏற்பாடு செய்யுமாறு பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 3-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்க வேண்டும் என பேரவைத் தலைவர் யூ.டி.காதர் வலியுறுத்தி உள்ளார். அதேவேளையில் மதிய...
அமெரிக்காவில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய மாணவி நீலம் ஷிண்டேவை பார்வையிட அவரது தந்தைக்கு விரைவில் விசா கிடைக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மகாராஷ்ராவைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே. அமெரிக்காவில் படிக்கும் இவர் விபத்தில் சிக்கி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை பார்வையிட அவரது தந்தை தனாஜி ஷிண்டே, அவசர விசா கேட்டு அமெரிக்க துணை தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விஷயத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்கு கொண்டு...
வக்பு சட்ட திருத்த மசோதாவில், நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த 23 மாற்றங்களில் 14 மாற்றங்களை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள முஸ்லிம் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய, மாநில வக்பு வாரியங்கள் முடிவெடுக்கின்றன. இதில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரவும், வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்தவும், துஷ்பிரயோகத்தை தவிர்க்கவும், வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்களை கொண்டு வந்து மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை...
கொல்கத்தா: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்துவர ஏன் விமானத்தை அனுப்பவில்லை என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம் ஊடுருவல் பற்றி பாஜக பேசுகிறது. ஆனால் நமது குடிமக்கள் அமெரிக்காவில் இருந்து...