சத்தீஸ்கர் மாநில மதுபான ஊழல் வழக்கில், அம்மாநில கலால் துறை சிறப்பு செயலாளரும் மாநில சந்தை கூட்டுறவு நிறுவன இயக்குநருமான அருண் குமார் திரிபாதியை கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரிபாதி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், திரிபாதி மீது வழக்கு தொடர முன்அனுமதி பெறவில்லை எனக் கூறிய...
டெல்லி ஜாமியா நகரில் கடந்த திங்கட்கிழமை ஷாபாஸ் கான் என்பவரை ஒரு வழக்கில் கைது செய்ய போலீஸார் முயன்றனர். அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கான் தலைமையிலான கும்பல் தங்களை தாக்கியதாகவும் இதில் ஷாபாஸ் கான் தங்கள் பிடியில் இருந்து தப்பி விட்டதாகவும் டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அமானுல்லா கான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அமானுல்லா கான் முன்ஜாமீன் கோரியிருந்தார்....
உலகெங்கிலும் உள்ள காதலர்கள் இன்று காதலர் தினத்தை மிகவும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இவர்களுக்காகவே ஒரு செடி இந்த பூமியில் உள்ளது. அது காதலர்களின் செடியாக பெயர் சூட்டப்பட்டு புகழ் பெற்று வருகிறது.
காதலர்கள் தங்கள் பெயரை பழங்கால சுவர்கள், மரங்கள் போன்றவற்றில் பொறித்து வைப்பது வழக்கம். இவர்களுக்காகவே ஒரு செடி உள்ளது. இதனை 'வேலண்டைன்ஸ் ட்ரீ’ என்று அழைக்கின்றனர். இந்த செடியின் தாவரப் பெயர் ‘க்ளுசியா ரோஸியா’ ஆகும். அதிக...
சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே ஜுன், ஜூலையில் சுற்றுலா கப்பல் இயக்கப்பட உள்ளது.
விசாகப்பட்டினத்தில் சுற்றுலா முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலா வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வரும் ஜுன், ஜூலை மாதங்களில் சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே 3 சேவைகள் சுற்றுலா கப்பல் இயக்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் புறப்படும் கப்பல் ஜூலை 2-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்....
ரானா நாடு கடத்தல் முதல் F-35 போர் விமானம் ஒப்பந்தம் வரை: மோடி – ட்ரம்ப் சந்திப்பு ஹைலைட்ஸ்
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.14) அதிகாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது, F-35 போர் விமானங்களை வாங்குவது, எண்ணெய் இறக்குமதி, வர்த்தக ஒப்பந்தம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இருதரப்பிலும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டுவிட்டார். அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர்...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரியாக இருந்தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி இருந்தது. லக்னோ சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.
கடந்த 1976-ம் ஆண்டு அயோத்தி சம்ஸ்கிருத மகா வித்யாலயாவில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். ராமரின்...
முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, உலகளவில் அதிலும் முக்கியமாக இந்தியாவில் உள்ள 32 லட்சம் கோயில்களை ஒற்றைக் கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலாக்களை முறையாக ஊக்குவிக்கும் வகையில் இதுவரை செய்யாத முன்னோடி திட்டமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ரூ.6 லட்சம் கோடி ரூபாய் மதி்பபுள்ள பொருளாதாரத்தை உள்ளடக்கிய முக்கியமான கோயில்களை ஒரே நெட்வொர்க் சங்கிலியின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது, மக்கள் எளிமையாகவும்,...
மகாகும்பமேளாவில் மகி பவுர்ணமி தினத்தையொட்டி 73.60 லட்சம் பக்தர்கள் நேற்று புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. நாடெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தரள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மகி பவுர்ணமி தினமாகும். மகத்தான இந்நாளில் நீராடுவதற்காக நேற்று அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று மட்டும் 73.60 லட்சம் பக்தர்கள் நீராடியதாகத் தெரியவந்துள்ளது. திரிவேணி...
கேரளாவில் அரசு செவிலியர் கல்லூரியில் இளநிலை மாணவர்களை ராகிங் செய்ததாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் நகரில் அரசு செவிலியர் கல்லூரி உள்ளது. இதில் முதலாமாண்டு படித்து வரும் 3 மாணவர்கள், கோட்டயம் நகரில் உள்ள காந்திநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தனர்.
அதில், “மூன்றாமாண்டு பயிலும் 5 மாணவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து எங்களை உடல் ரீதியாகவும்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் ஃபல்நார் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியில் ஈடுபடும் சி-60 கமாண்டோ படையினர் கட்சிரோலி பகுதியில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு மாவோயிஸ்ட் முகாம் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டது. அப்போது இரு...










