திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியிருப்பதாவது: ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்தை கடந்த 1985-ல் அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். தற்போது தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எஸ்.வி.அன்னதான அறக்கட்டளைக்கு இதுவரை 9.7 லட்சம் பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் செலவாகிறது. இதுவரை 249 பக்தர்கள் ரூ.44 லட்சம் வீதம் நன்கொடை வழங்கி...
சத்தீஸ்கர் மாநிலம் தாந்தேவாடா மாவட்டம் மாடதி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமாரு காட்தி (30). நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டமானது மிகவும் பின்தங்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியிலிருந்து படித்து பட்டதாரியான சோமாரு காட்தி, 10 வருடங்களுக்கு முன்பு காவல் துறையில் இணைந்தார். உதவி சப் இன்ஸ்பெக்டராக(ஏஎஸ்ஐ) பதவி உயர்வு பெற்றார். பின்னர் தனது ஏஎஸ்ஐ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு...
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு 22.49 சதவீதத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யேஷோ நாயக் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, புதுப்பிக்தக்க எரிசக்தி உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து அதற்கான திட்டங்களை துரிதகதியில் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி...
உத்தர பிரதேசத்தில் பாஜக பிரமுகர் குல்பம் சிங் யாதவை, மர்ம நபர்கள் 3 பேர் விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தின் அலிகர் அருகேயுள்ள தப்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் குல்பம் சிங் யாதவ் (60). பாஜக பிரமுகரான இவர் , மேற்கு உத்தர பிரதேசத்தின் பாஜக மண்டல துணைத் தலைவராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு குன்னார் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் இவர் அப்போதைய...
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் 400 சிறுமிகள் லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பாலா நகரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் பேசியதாவது: கோட்டயம் மாவட்டம், மீனாச்சல் வட்டத்துக்குட்பட்ட சுமார் 400 சிறுமிகள் லவ் ஜிகாத் வலையில் (மத மாற்றம் செய்து திருமணம் செய்தல்) சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 பேர் மட்டுமே...
ம​கா​ராஷ்டிர மீன்​வளம் மற்​றும் துறை​முக மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் நிதேஷ் ராணே, ஆட்​டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்​றிதழ் வழங்​கும் நடை​முறையை அறி​முகப்​படுத்தி உள்​ளார். இதுகுறித்து அமைச்​சர் ராணே கூறிய​தாவது: மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள இந்து சமு​தா​யத்​தினருக்​காக முக்​கிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. முற்​றி​லும் இந்​துக்​களால் நடத்​தப்​படும் சரி​யான ஆட்​டிறைச்சி கடைகளை அடை​யாளம் காண ‘மல்​ஹர்’ சான்​றிதழ் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. அத்​துடன் இறைச்​சி​யில் கலப்​படம் இல்லை என்​பதை உறுதி செய்​ய​வும் இது உதவும். இந்​துக்​கள் மல்​ஹர்...
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரபிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அண்மையில் குற்றம் சாட்டி இருந்தனர். இதன்மூலம் போலி வாக்காளர்கள் மற்றும்...
இந்துக்களால் வென்றேன், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் மதக்கலவரங்கள் அதிகமாக நடந்த நகரங்களில் முக்கியமானது அலிகர். மத்திய அரசின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. இந்நகரில் முஸ்லிம்கள் சுமார் 40 சதவீதம் உள்ளனர். இந்நிலையில் அலிகர் பல்கலையில் ஹோலி கொண்டாடுவதில் எழுந்த சர்ச்சை குறித்து அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அவர்...
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தெருநாய்களை போன்று ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பாரத்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பார் அசோசியேசன் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி ஆட்சி நடைபெற்றபோது சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் ஒரு கிராமத்தின் தலைவர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக மாமன்னர் சிவாஜி விசாரணை நடத்தினார். அப்போது...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போர்ட் லூயிஸில் இன்று நடைபெறும் மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் மொரீஷியஸ் தீவு நாடு அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1715-ம் ஆண்டில் மொரீஷியஸை, பிரான்ஸ் ஆக்கிரமித்தது. கடந்த 1803 மற்றும் 1815-ம்...