Google search engine
கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜு, ஹர்தோய் மாவட்ட போலீஸில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளர். அதில் தன்னையும், தனது 6 குழந்தைகளையும் தவிக்க விட்டு தனது மனைவி ராஜேஸ்வரி, அதே...
கடந்த 40 ஆண்டுகளாக வங்க தேச விசா நீட்டிப்பில் பிஹாரில் வசித்த சுமித்ரா பிரசாத், குடியுரிமை திருத்த சட்டத்தின்(சிஏஏ) கீழ் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். பிஹாரின் கதிகார் மாவட்டத்தில் பிறந்தவர் சுமித்ரா (40). இவர் கடந்த 1970-ம் ஆண்டு தனது 5-வது வயதில் கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றார். பின்பு அங்கேயே தங்கி வளர்ந்தார். பள்ளி படிப்பையும் அங்கு முடித்தார். கிழக்கு பாகிஸ்தான் கடந்த...
பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரின் சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் முடக்கியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவைச் சேர்ந்தவர் முபாஷிர் அகமது. இவர் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர். இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் நேற்று முடக்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “முபாஷிர் அகமதுவின் அசையா சொத்து டிரால் மண்டலத்திலுள்ள சையதாபாதில்...
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நேற்று முன்தினம் காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாக எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) செயல்பட்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய மீட்புப் பணி நேற்று வரை தொடர்ந்தது. இந்நிலையில்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நேற்றுமுன்தினம் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் மாநில காவல் துறையைச் சேரந்த கான்ஸ்டபிள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவர்களது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டியை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து தியோ சாய் கூறுகையில், “நக்சலைட்டுகளின் கோழைத்தனமான ஈவுஇரக்கமற்ற தாக்குதலில்...
இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில். இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். பாரத மண்டபத்தில் இந்த சேவையை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது: வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க, இந்திய விசாரணை அமைப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை...
வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் இந்த 10 நாட்களில் மட்டும் 7 லட்சம்...
கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று முன் தினம் காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றனர்....
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யுடன் தமிழர்​களுக்கு உள்ள கலாச்​சாரத் தொடர்பை வலுப்​படுத்த ‘காசி தமிழ்ச் சங்கமம்’ (கேடிஎஸ்-3) 2022-ல் தொடங்​கப்​பட்​டது. வாராணசி​யில் ஒரு மாதம் நடைபெற்ற இந்த சங்கமம், பிரதமர் நரேந்திர மோடி​யின் சிந்​தனை​யில் உருவானது. தனது மக்களவை தொகு​தி​யில் நடைபெற்​ற​தால் இதை பிரதமர் மோடியே தொடக்கி வைத்​திருந்​தார். அந்த வகையில், தெலுங்கு, சவுராஷ்டிரா சங்கமங்​களும் நடைபெற்றன. இதையடுத்து, 2-வது தமிழ்ச் சங்கமம் வாராணசி​யில் நவம்பர் 2023-ல் 10 நாட்​களுக்கு...
மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். இது நல்ல பலனை அளித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் உள்ளது நிம்புட் கிராமம். இங்குள்ள சுரேஷ் ஜெகதாப் 65 என்ற விவசாயி பல ஆண்டு காலமாக தனது நிலத்தில் காய்கறி மற்றும் பழங்களை விவசாயம் செய்து வந்தார். இங்குள்ள வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை...