Google search engine
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் என்ற இடத்தில் மசூதியில் நடைபெற்ற விழாவில் யானை ஒன்று மிரண்டு ஒருவரை தூக்கி வீசியது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் காயம் அடைந்தனர். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் திருரில் மசூதி ஒன்று உள்ளது. இங்கு புதியங்காடி என்ற விழா நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு 5 அலங்கரிக்கப்பட்ட...
கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்தது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது நிறுவன உயர் அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. அதில், இந்தியாவில் சோலார் மின்சக்தி திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக...
சாலை விபத்​தில் காயம் அடைந்​தவருக்கு பணமில்லா சிகிச்சை அளிக்​கும் திட்டம் மார்ச் 2025-க்​குள் நாடு முழு​வதும் விரிவுபடுத்​தப்​படும் என்று மத்திய சாலை போக்கு​வரத்​துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்​துள்ளார். நெடுஞ்​சாலைகளில் விபத்து​களில் உயிரிழப்​போரின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய சாலை போக்கு​வரத்​துத் துறை அமைச்​சகம் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி பணமில்லா சிகிச்சை திட்​டத்தை அமல்​படுத்​தி​யது. இந்த திட்டம் அசாம், சண்டிகர், புதுச்​சேரி உட்பட சில மாநிலங்​களில் அறிமுகப்​படுத்​தப்​பட்​டது....
விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி, நேற்று தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவரை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர், பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு...
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியலை 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ), உலக வங்கி, குற்ற பதிவுகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவு ஆதாரங்களை ஒருங்கிணைத்து இந்த பட்டியல்...
பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக் கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடக்கிறது. தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய 3 கட்சிகள் ஆம்...
இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அத்துடன் லிபரல் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் அடிக்கடி மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை அல்டிமேட் பிக்பாஸ் என்று சித்தரிக்கும் ஒரு...
நாடு முழு​வதும் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்து​வதற்கு வகை செய்​யும் மசோதா கடந்த நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடரின்​போது அறிமுகம் செய்​யப்​பட்​டது. இதையடுத்து, அந்த மசோதா நாடாளு​மன்ற கூட்டுக் குழு​வின் பரிசீலனைக்கு அனுப்​பப்​பட்​டது. இதைத்​தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 12 மாநிலங்​களவை உறுப்​பினர்​கள், 27 மக்களவை உறுப்​பினர்கள் அடங்கிய கூட்டுக்​குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வின் தலைவராக பாஜக எம்பி பி.வி. சவுத்ரி உள்ளார். இந்த நிலை​யில், ஒரே நாடு, ஒரே...
 கர்நாடகாவில் கடந்த மாதம் நக்சலைட் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் விக்ரம் கவுடா போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதையடுத்து நக்சல் ஒழிப்புபடை அதிகாரிகள் அமைதிக்கான மக்கள் மன்றத்தின் உறுப்பினர் லலிதா நாயக் மூலம் தலைமறைவாக உள்ள நக்சலைட்டு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 6 பேர் சரணடைய விருப்பம் தெரிவித்தனர். அதன்படி 6 பேரும் நேற்று மாலை முதல்வர் சித்தராமையா முன்னிலையில் அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் சரண் அடைந்தனர்....
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து, வி.நாராயணன் பொங்கல் பண்டிகை தினமான ஜன. 14-ம் தேதி பொறுப்பேற்கிறார். அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கேரள...