ஹைதராபாத்தில் ரூ.200 கோடியில் உலக அழகி போட்டி நடத்த எதிர்கட்சியான பிஆர்எஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு, பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், கே.சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி ராமாராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.71 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். ஆனால், இது போன்ற சமயத்தில் ரூ.200 கோடி செலவு செய்து...
பால், உர உற்பத்தி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு கால்நடை இனங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் வகை செய்யும் ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்துக்கு ரூ.3,400 கோடி ஒதுக்க...
2025-26 வருவாய் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தெலங்கானா மாநில நிதி அமைச்சர் பட்டி விக்ரமார்க்கா சட்டப்பேரவையில் நேற்று ரூ.3,04,965 கோடியில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டுக்கு எதிர்கட்சியின் செயல் தலைவர் கே.டி ராமராவ் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த பட்ஜெட் குறித்து கே.டி. ராமாராவ் பேசும் போது, “விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி, விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. தெலங்கானா அரசு 36 சதவீத கிருஷ்ணா நீரை உபயோகப்படுத்தி...
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச அதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீஸார் நேற்றிரவு (புதன்கிழமை) கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை அப்புறப்படுத்தி அவர்களின் தற்காலிக...
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்
admin - 0
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் திருத்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மத...
பெங்களூருவில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்க துறை சோதனை
admin - 0
அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் தொடர்புடைய அறக்கட்டளை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் (என்ஜிஓக்கள்) அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் (92). இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.61,000 கோடி ஆகும். கடந்த 1993-ம் ஆண்டில் ஓபன் சொசைட்டி பவுண்டேசன்ஸ் (ஓஎஸ்எப்) என்ற அறக்கட்டளையை சோரஸ் உருவாக்கினார். இந்தியா உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓஎஸ்எப் செயல்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளின்...
‘இசை மேதை இளையராஜா, அனைத்து வகையிலும் ஒரு முன்னோடி’ என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையை லண்டனில் கடந்த 9-ம் தேதி அரங்கேற்றினார். ஆசியாவிலிருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை, இளையராஜா நேற்று சந்தித்தார்.
இதுகுறித்து மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பது: "நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை...
அவுரங்கசீப் சமாதியை அகற்ற கோரி நாக்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது எப்படி? – முழு பின்னணி
admin - 0
மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், நாக்பூரில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது திட்டமிட்ட சதி என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ என்ற பெயரில் திரைப்படமாக இந்தி மொழியில் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி,...
சத்தீஸ்கரில் சட்டவிரோத மதமாற்றத்தை எதிர்கொள்ள புதிய கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறினார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் அஜய் சந்திரகர் பேசுகையில், "மாநிலத்தில் அப்பாவிகள், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளை தவறாக வழிநடத்தி மதமாற்றம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது. சுகாதாரம், கல்வி, சமூகப் பணி போன்ற நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதியை பெற்று, அந்தப் பணத்தை மதமாற்றப்...
ரூ.281 கோடி சிஎஸ்ஆர் நிதி மோசடியில் 1,343 வழக்குகள் பதிவு: சட்டப்பேரவையில் பினராயி விஜயன் தகவல்
admin - 0
கேரளாவில் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தி பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி ரூ.281 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 1,343 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர் கடந்த 2022-ல் சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பை தொடங்கினார்.
பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்)...










