Google search engine
2ஜி அலைக்கற்றை மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு தயாராகி விட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2008-ல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும் மத்திய அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது...
பாதி விலை ஸ்கூட்டர் மோசடி தொடர்பாக கேரளாவின் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர் கடந்த 2022-ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கினார். கேரளா முழுவதும் சுமார் 170 தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய கூட்டமைப்பை உருவாக்கினார். பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) பெற்று பொதுமக்களுக்கு பாதி...
உத்​தரபிரதேச மாநிலத்​தில் முன்பை விட குற்​றங்கள் குறைந்​திருப்​பதாக வாராணசி​யின் போலீஸ் ஐஜி பதவி​யில் இருக்​கும் தமிழரான கே.எழிலரசன் கூறி​யுள்​ளார். புதுச்​சேரியை சேர்ந்த இவர் தோட்​டக்கலை துறை​யில் முனைவர் பட்டம் பெற்று வாராணசி​யின் மாநகரக் காவல்​துறை​யின் இணை ஆணையராகப் பணியாற்று​பவர், ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி பின்​வரு​மாறு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்​யநாத் தமிழர்களை முக்கியப் பணிகளில் அமர்த்தியிருப்பதாக் கூறப்படுவது உண்மையா? இது உண்மை​தான். வாராணசி, காசி மற்றும் பனாரஸ்...
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்கிறார். கடந்த 1950-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்து வந்தது. கடந்த 1989-ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையரோடு கூடுதலாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 1990-ம் ஆண்டு அப்போதைய வி.பி.சிங்...
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதியில் நடைபெற்று வரும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவித்தார். திருப்பதி ஆஷா அரங்கில் ‘டெம்பிள் கனெக்ட்’ நிறுவனம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு...
கோவாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பயணியை வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றத்துக்காக கோவாவைச் சேரந்த 31 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஐரிஷ்-பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான டேனியல் மெக்லாலின் என்ற பெண் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவுக்கு சுற்றுலா வந்தார். அப்போது, கோவாவைச் சேர்ந்த விகத் பகத் என்பவர் டேனியலுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். பின்னர் அவரை பாலியல்...
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனால் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி...
வளைகுடா நாட்டிலிருந்து மனைவி திரும்புவதற்கு முன்பு எனது கடன்களை அடைக்க வங்கியில் கொள்ளையடித்தேன் என்று கேரளாவைச் சேர்ந்தவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் போட்டா பகுதியிலுள்ள ஃபெடரல் வங்கிக் கிளையில் 3 தினங்களுக்கு முன்பு கொள்ளைச் சம்பவம் நடந்தது. மர்மநபர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து கத்திமுனையில் மிரட்டி ஊழியர்களை அறையில் தள்ளி பூட்டி ரூ. 15 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றார். வெறும் இரண்டரை நிமிடங்களில்...
காஷ்மீர் பண்டிட்டுகள் கண்ணியத்துடன் எங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே விருப்பம் என காஷ்மீர் தலைமை முஸ்லிம் மதகுரு மிர்வைஸ் உமர் பாரூக் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு பண்டிட்டுகள் திரும்ப வேண்டும் என்பது அரசியல் பிரச்சினை இல்லை. என்னைப் பொருத்தவரை அது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. இதில் வாக்கு வங்கி அரசியல் கூடாது. நாம்...
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோய். காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக செயலாற்றி வருகிறார். இவரது மனைவி எலிசபெத் கால்பர்ன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பு இருப்பதாக பாஜக அண்மையில் குற்றம்சாட்டியது. இதுகுறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர்...