Google search engine
தெலங்கானா மாநிலத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெட்ரோல் பங்குகள் வீதம் அரசு நிலத்தில் அமைத்து கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார். தெலங்கானா மாநிலம், நாராயணபேட்டா பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான பெட்ரோல் பங்க் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று திறந்து வைத்து பேசியதாவது: தெலங்கானா மகளிர் சுய உதவி குழுவில் சுமார் 67 லட்சம் பேர்...
வளர்ந்த பாரதத்தை உருவாக்க நாட்டின் அனைத்து துறைகளிலும் சிறந்த தலைமை தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி குஜராத் தலைநகர் காந்தி நகரில் 22 ஏக்கர் பரப்பளவில், தலைமைப் பண்பு பள்ளி (சோல்) கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்துக்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கடந்த 14-ம் தேதி அடிக்கல் நாட்டினார். ரூ.150 கோடி செலவில் கட்டப்படும் தலைமைப் பண்பு பள்ளி அடுத்த...
மதரஸா கல்வி நிலையங்கள் வழங்கும் பட்டங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் நிவாரணம் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது பதிலளிக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மதரஸா கல்வி நிலையங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பான வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும்...
சைபர் குற்றவாளிகள் மோசடி செய்வதில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பம், நுணுக்கங்களை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். அதன்படி தற்போது ஓடிபி இல்லாமலேயே வங்கி கணக்கை ஹேக் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் அவர்கள் தற்போது ஈடுபட தொடங்கியுள்ளனர். போலீஸார் இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். நாம் பகிரும் மொபைல் எண்கள் மூலமாக தனிநபர்களின் விவரங்களை திருடும் இந்த சைபர் மோசடிக் கும்பல் அதனை பயன்படுத்தி சமீபத்தில்...
மகா கும்பமேளா மூலம் உத்தர பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இந்த விழா வரும் 26-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது: வரும் 2027-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை பாரதம்...
தமிழகத்தின் கோ-ஆப் டெக்ஸ், ஆந்திராவின் ஆப்-கோ ஆகிய இரு கைத்தறி நிறுவனங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம் நேற்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கையெழுத்தானது. விஜயவாடாவில் விற்பனையாளர் - விநியோஸ்தர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஜவுளி மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆந்திர கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சவிதா மற்றும் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது கைத்தறி ஆடை உற்பத்தி, விற்பனை, நெசவாளர் பிரச்சினைகள், அவர்களுக்கு...
சம்பல் பகுதி​யில் கலவரம் ஏற் படுத்த ஐக்கிய அரபு அமீரகத்​தில் இருந்து சதி செய்​துள்ளனர் என்று சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்​துள்ள 4,400 பக்க குற்​றப்​பத்​திரி​கை​யில் குற்றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதி​யில் முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்​டதாக கூறப்​படும் ஷாஹி ஜமா மசூதி, கோயிலை இடித்து​விட்டு கட்டப்​பட்​டுள்ளதாக குற்றம் சாட்​டப்​பட்​டது. இதுதொடர்பான வழக்​கில், மசூதி​யில் ஆய்வு நடத்த இந்திய தொல்​லியல் துறைக்கு நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதையடுத்து...
மராட்டியத்தின் முக்கிய மன்னரான சம்பாஜி மகராஜ் குறித்து விக்கிப்பீடியாவில் ஆட்சேபனைக்குரிய வகையில் உள்ளடக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறி விக்கிபீடியாவின் 4 ஆசிரியர்கள் மீது அம்மாநில சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜின் மகன் சம்பாஜி மகராஜ். விக்கிபீடியாவில் இவரது வாழ்கை வரலாற்று பதிவில் ஆட்சேபனைக்குரிய சில உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இதற்கு காரணமானவர்கள் என்ற வகையில் விக்கிப்பீடியாவைச்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில், மனைவி, குழந்தைகளுடன் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ஆசையில் வீட்டில் அடைத்து வைத்துவிட்டு சென்ற வயோதிகமான தாயாரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீஸார் மீட்டனர். இதுகுறித்து ராம் கர் காவல் துறை அதிகாரி பரமேஷ்வர் பிரசாத் கூறியதாவது: சுபாஷ் நகர் காலனியில் உள்ள மத்திய கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான குடியிருப்பில் 65 வயதான சாந்தினி தேவியின் வீட்டுக்குள் இருந்து உதவி கோரி அழுகுரல் கேட்பதாக போலீஸாருக்கு தகவல்...
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மெட்ரோ ரயில் பாதைக்கு இடையூறாக இருந்த மசூதியை அகற்ற முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 168 ஆண்டுகள் பழமையான அந்த மசூதியை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. மேற்கு உ.பி.யின் மீரட் நகரில் டெல்லி சாலையில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கப்படுகிறது. இப்பணிக்கு ஜெக்தீஷ் மண்டபத்திற்கு அருகில் 1857-ல் கட்டப்பட்ட பழமையான மசூதி இடையூறாக இருந்தது. இதை அகற்றினால் மட்டுமே மெட்ரோ பாதை அமைக்க முடியும் என்ற...