திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் அன்னபிரசாதம் வழங்க விரும்புவோர் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்காக திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத திட்டம் எனும் பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தில்...
குஜராத் நகரசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முஸ்லிம்களில் 63 சதவிகிதம் பேருக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால், ஆளும் கட்சி பாஜகவுக்கு முஸ்லிம்கள் ஆதரவு திரும்புவதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 1980 வரை முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தனர். பிறகு பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவாக அவர்களது வாக்குகள் மாற தொடங்கின. குஜராத்தில் பிப்ரவரி 2002 மதக்கலவரத்துக்கு பின் பாஜகவுக்கு வுக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில், கடந்த 2007 முதல்...
ஆக்ராவில் உள்ள டிபன்ஸ் காலனியில் வசிப்பவர் நரேந்திர சர்மா. விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் மானவ் சர்மா (25), மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். மானவ் சர்மாவுக்கும் நிகிதா சர்மா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் மும்பையில் குடியேறினர்.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டு மானவ் சர்மா...
டெல்லியில் முதல்வர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது பற்றி விசாரணை: அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்
admin - 0
டெல்லியில் முதல்வர் இல்லம் பல கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தார். அப்போது, 6, பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். இந்த கட்டிடத்தை புதுப்பிக்க பல கோடி ரூபாயை செலவிட்டதாக புகார் எழுந்தது. பல்வேறு நவீன வசதிகள் கொண்ட இந்த இல்லத்தை...
குஜராத்தின் நர்மதை மாவட்டத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பார்வையிட்டார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் இரவு நர்மதை மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரை (கேவடியா) அடைந்தார்.
அவர் நேற்று காலை ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமைக்கான சிலையை பார்வையிட்டார். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சர்தார்...
பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டமாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' உள்ளது. இதற்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடந்த வருடம் டிசம்பர் 17-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தொடக்கம் முதலே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற...
உரிய முன் அனுமதியின்றி பொது இடங்களில் கொடிக்கம்பங்களை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வைப்பதற்கு யாரையும் அனுமதிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அனைத்து சட்டவிரோத கொடிக்கம்பங்களும் அரசியல் கட்சி, தொழிற்சங்கம் போன்றவற்றால் நிறுவப்பட்டவை என்பதால் மாநில அரசு இதற்கான கொள்கை வகுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான கொடிக்கம்பங்கள் அமைக்கப்படாது என...
கலவரங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மணிப்பூர் மாநிலத்தில் 104 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட காங்போக்பி, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தவுபால், இம்பால் மேற்கு மற்றும் காக் சிங் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 104 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆயுதங்களை திரும்ப...
டெல்லி சட்டப்பேரவை வளாகத்துக்குள் நேற்று நுழைந்த ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை கடந்த செவ்வாய் கிழமை அன்று தொடங்கியது. அப்போது முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படம் அகற்றப்பட்டதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் உரையின் போது ஜெய் பிம் என கோஷம் எழுப்பினர். இதனால் ஆம் ஆத்மி எம்எல்ஏ,.க்கள் 21...
போபால் நச்சுக்கழிவை அகற்றும் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
admin - 0
போபால் விஷ வாயு விபத்து நடந்த இடத்திலிருந்து நச்சுக்கழிவுகளை அழிப்பது தொடர்பான மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு விஷ வாயு கசிவு ஏற்பட்டதில் 5,479 பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இது உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை...










