பெங்களூருவை சேர்ந்த பாரத் பூஷன் தன் மனைவி சுஜாதா மற்றும் 3 வயது மகனுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பாரத் பூஷன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது மனைவி சுஜாதா இந்த சம்பவத்தை விவரிக்கையில், ‘‘ராணுவ உடையில் இருந்த தீவிரவாதிகள் என் கணவரை சூழ்ந்துகொண்டனர். அவரை சுட்டுக்கொல்வதற்கு முன் நீ இந்துவா?’’ என கேட்டனர். அதற்கு அவர், ‘‘இல்லை’’என்றதும் சுட்டுக் கொன்றனர். என்னையும் குழந்தையையும் அவர்கள் சுடவில்லை’’ என்றார்.
ஷிமோகாவை...
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உ.பி.யின் கான்பூரை சேர்ந்த சுபம் துவிவேதி என்ற இளைஞரும் உயிரிழந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, அதாவது 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. இந்நிலையில் இவர் சிலநாள் விடுமுறையில் தனது மனைவியுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தார். துரதிருஷ்டவசமாக அவரது பயணம் ஒரு கனவாக மாறியது.
இதுகுறித்து அவரது சகோதரர் சவுரப் துவிவேதி கூறுகையில், “ எனது சகோதரர் தலையில் சுடப்பட்டு இறந்ததாக அவரது...
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் டான்மார்க் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால்...
பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் நேற்று கூறியதாவது: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் வெறும் பைத்தியக்காரத்தனமான செயல் அல்ல. இது ஒரு அரசின் (பாகிஸ்தான்) ஆதரவுடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் ஆகும். நமது நாட்டின் சட்டப்படி பாகிஸ்தானை தீவிரவாத...
தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெட்ரோல் பங்க் உட்பட வர்த்தக நிறுவனங்களை மூடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். முக்கிய சுற்றுலா தலங்கள் உட்பட பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குலை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வர்த்தக நிறுவனங்களை மூடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த...
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், ஜி.கிரிஷ், பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் திங்கட்கிழமை பஹல்காமில் தங்கியிருந்த நிலையில் மறுநாள் காலை 9.30 மணிக்கு பஹல்காமில் இருந்து புறப்பட்டு, சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீநகருக்கு நண்பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தனர். தீவிரவாத தாக்குதலுக்கு சில மணி நேரத்துக்கு முன்பு இவர்கள் பஹல்காமை விட்டு வெளியேறியதன் மூலம்...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவு அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்' (டிஆர்எப்) பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆடில் குரி, ஆசிப் ஷேக், சுலைமான் ஷா மற்றும் அபு தல்ஹா ஆகிய 4 தீவிரவாதிகளின் படத்தை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் ஆடில் குரி என்பவர் காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஆசிப் ஷேக் காஷ்மீரின் ஷோபூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது....
இந்நிலையில் தேவை அதிகரிப்பு அடிப்படையில் விமான கட்டணங்களை உயர்த்தக் கூடாது என விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியில் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் `எக்ஸ்' தளத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்ட பதிவில், “பஹல்காம்...
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான, முட்டாள்தனமான, கொடூரமான செயல். இது கடும் கண்டனத்துக்குரியது. நமது பகுதியை நம்பி சுற்றுலா வந்த பயணிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது.
சுற்றுலாப் பயணிகளின்...
கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது மகன் கார்த்திகேஷ் அளித்த புகாரில், ''எனது தந்தையை எனது தாய் பல்லவி (64), எனது சகோதரி கீர்த்தி (31) ஆகியோர் கொலை செய்திருக்கலாம். சொத்து பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவரும் அவரை கொல்ல சதி தீட்டினர்'' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எச்.எஸ்.ஆர்.லே...










