தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள் – தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
admin - 0
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில், பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, திமுக எம்.பி.க்களை ஜனநாயகம் இல்லாதவர்கள், அநாகரீகமானவர்கள், மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். தமிழக மக்களிடம் நேர்மையாக இல்லை என்றும் பேசினார். இதுதவிர, கடந்தாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் மற்றும் கனிமொழி எம்.பி.யுடனான சந்திப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சரின்...
காஷ்மீரின் கதுவா பகுதியில் காணாமல்போன 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர். மூன்று பேரையும் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
காஷ்மீரின் ஜம்மு பகுதி கதுவா மாவட்டம், பிலாவர் அருகேயுள்ள சுராக் கிராமத்தைச் சேர்ந்த தர்சன் சிங் (40) யோகேஷ் சிங் (32), வருண் சிங் (15) ஆகியோர் கடந்த 6-ம் தேதி உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக சென்றனர்....
கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினால் வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர் என உ.பி.யில் கைதான தீவிரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக, பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) தீவிரவாதி லஜர் மசி (29) கடந்த 6-ம் தேதி உ.பி.யின் கவுஷாம்பி நகரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் (எஸ்டிஎப்) விசாரணை நடத்தி...
மராட்டிய மாமன்னர் சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ‘சாவா’ என்ற திரைப்படம் வெளியானது.
மராத்தியர்களிடம் இருந்து தங்கத்தை கொள்ளையடிக்கும் முகலாயர்கள் மத்திய பிரதேசத்தின் புர்கான்பூர் ஆசிர்கர் கோட்டை பகுதியில் அவற்றை புதைத்து வைத்திருப்பதாக திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக ஆசிர்கர் பகுதி மண்ணில் தங்க புதையல்கள் இருப்பதாக மக்களிடையே காட்டுத் தீ போன்று வதந்தி பரவி...
தெலங்கானாவில் ஸ்ரீசைலம் கால்வாய் திட்ட சுரங்கத்தில் நாளை முதல் ரோபோக்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தெலங்கானாவில் ஸ்ரீசைலம் கால்வாய் திட்டத்துக்காக எஸ்எல்பிசி சுரங்கம் 14.கி.மீ தொலைவுக்கு தோண்டப்பட்டது. இதில் சுரங்கத்தின் மேற்கூரை கடந்த மாதம் 22-ம் தேதி இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் சிக்கினர். சுரங்கத்துக்குள், தண்ணீர், சேறு அதிகளவில் உள்ளதாலும், அதில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் ஒரு பகுதி மூழ்கியுள்ளதாலும், விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு குழுவினரால்...
ம.பி.யின் ரத்லாம் நகரில் வசிக்கும் பண்டி நினாமா(29), ஒரு தகராறில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் கோமாவில் இருப்பதாகக்கூறி ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்துமாறு பண்டியின் குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் கூறினர். பணத்தை எடுத்து வர பண்டி யின் மனைவி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பண்டி நினாமா, மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே, தான் கோமாவில் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவமனைக்கு வந்த பண்டியின் மனைவி இதைப்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
admin - 0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ஒருபோதும் தானாக முன்வந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் விட்டுக்கொடுக்காது என்று நான் கருதுகிறேன். ஆனால், ஒருநாள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று நான் நம்புகிறேன்.
அந்தப் பகுதி...
18 ஆண்டுகளுக்கு முன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) அதிரடியாக கைது செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் உல்பத் ஹுசைன் (52). இவர் படித்துமுடித்த பின்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்தியாவுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் பயிற்சி பெற்று திரும்பினார். உ.பி. மொரதாபாத்தில் இவர்,...
நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற பிரதமர் மோடி அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீ்ப் தன்கருக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் நெஞ்சு வலியும், அசவுகரியமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய சிகிச்சை நிபுணர் ராஜீவ் நாராங் சிகிச்சை அளித்தார். அவர்...
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைகோள் ‘ஸ்காட்-1’ தென் அமெரிக்காவை படம் பிடித்து அனுப்பி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘திகந்தரா’. இந்நிறுவனம் வர்த்தக பயன்பாட்டுக்காக ‘ஸ்காட்-1’ என்ற பெயரில் கண்காணிப்பு செயற்கை கோளை உருவாக்கியது. இதில் உள்ள கேமிரா விண்வெளியில் பூமியை சுற்றுக்கொண்டிருக்கும் பொருட்களை கண்காணிக்கும் திறன் கொண்டது.
இந்த ஸ்காட் செயற்கைகோள், ஸ்பேஸ் எக்ஸ்...










