ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் கூறியதாவது: தமிழ் நாட்டின் பிரச்சனைகளை நான் அறிவேன். அவற்றை களைய ஜனசேனா கட்சி சார்பில் நான் எப்போதும் உதவ தயாராக உள்ளேன்.
மக்களுக்கு நன்மை நடக்க வேண்டுமெனில், நமக்கு பலமான தலைவர் தேவை. அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற உணர்வு மக்களுக்கு வரும். ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். இதற்கு நமக்கும், நமது நாட்டுக்கும் கிடைத்துள்ள பலமான நாயகனே...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்திய போது, திருமணங்களில் வீடியோ எடுக்க பயன்படும் ட்ரோன்கள், பயனற்ற ஆயுதங்கள், திறனற்ற ஏவுகணைகளை இந்தியா மீது பாகிஸ்தான் ஏவியதாக சமூக வலைதளங்களும் உருது நாளிதழ்களும் விமர்சனம் செய்துள்ளன.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய போது, பாகிஸ்தான் பதிலுக்கு ஏவிய திறனற்ற ஏவுகணைகள் இலக்கை தாக்குவதற்கு முன்பாகவே வெடித்து சிதறியுள்ளன. இதுபோல், பயனற்ற ஆயுதங்களை வைத்து இந்தியாவுடன் திறமையாகப் போர் புரிவதாக...
‘‘இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, 10 சேட்டிலைட்கள் 24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணித்து வருகின்றன’’ என்று இந்திய விண்வெளி ஆய்வுத் துறை தலைவர் வி.நாராயணன் உறுதியாக கூறினார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆய்வுத் துறை (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் பங்கேற்றார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி: டிஆர்டிஓ முன்னாள் தலைவர்
admin - 0
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது என டிஆர்டிஓ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எந்த ஒரு நாடும் சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாடு தன்னுடைய திறன்களை வளர்த்துக்கொண்டால், அது நவீன தொழில்நுட்பங்களையும் மேம்படுத்திக் கொள்ளும். மேலும் அந்த முறைகள்...
தாக்குதல் தற்காலிகமாகவே நிறுத்தம்; பாகிஸ்தான் இனியும் அத்துமீறினால் தகுந்த பதிலடி: பிரதமர் மோடி எச்சரிக்கை
admin - 0
அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன்....
எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
admin - 0
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை...
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் 100 தீவிரவாதிகள், 40 பாக். வீரர்கள் உயிரிழப்பு; இந்திய படையினர் 5 பேர் வீரமரணம்
admin - 0
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்திய படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் கய், வைஸ் அட்மிரல் பிரமோத், ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்தி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாட்களுக்கு பிறகு, நேற்று அமைதி திரும்பியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா கடந்த 7-ம் தேதி மேற்கொண்டது. அன்று முதல் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களிடம் பதற்றம் நிலவியது.
எல்லை பகுதியை ஒட்டி உள்ள...
உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அங்கு ஆண்டுக்கு சுமார் 100 ஏவுகணைகள் தயாராகும் என கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மையமானது உ.பி.யின் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இது...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள டிஆர்டிஓ அமைப்பின் பொறியியல் பிரிவு தலைவர் டலோலி கூறியதாவது: போர்க்களம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின்போது வீரர்களின் உயிரிழப்பை தடுக்க ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மனிதர்களை போன்ற ரோபோ வீரர்களை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளாக மாதிரி ரோபோக்களை தயார் செய்திருக்கிறோம். இந்த ரோபோக்கள் கடினமான மலைப்பகுதிகளில் எளிதாக ஏறிச் செல்லும். நாம் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று...










