மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் படையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா - மியான்மர் எல்லைக்கு அருகில், மணிப்பூரின் சந்தேல் மாவட்டம், நியூ சாம்தால் கிராமத்தில் ஆயுதமேந்திய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக புதன்கிழமை உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில்...
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் ட்வீட் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது...
பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை.
தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர்...
அமெரிக்க பொருட்களுக்கு பூஜ்ய வரி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு
admin - 0
அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை பூஜ்யமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய நிலையில், அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தோஹாவுக்கு சென்றுள்ள ட்ரம்ப் அங்குள்ள தொழிலதிபர்கள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது முதலாவதாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஆலையை தோஹாவில்...
நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களை திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, எந்தவித சட்டப்பூர்வமான ஆவணங்களும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் தங்கியிருந்த வங்க தேசத்தவர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானங்கள்...
நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.
கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா...
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட எல்லைப பாதுகாப்புப் படை வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு
admin - 0
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் (பிஎஸ்எஃப்) இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக சென்று பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர். எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா
admin - 0
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஹர்ஷ் கோயங்கா கூறியுள்ளதாவது:
இந்தியர்கள் அதிக அளவில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடியை இந்தியர்கள் சுற்றுலாவுக்கு செலவழித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு ‘பர்கவஸ்த்ரா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்காக சோலார் டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (எஸ்டிஏஎல்) என்ற உள்நாட்டு நிறுவனம் குறைந்த செலவில் ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டுகளை உருவாக்கியது. இது ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டுகள் கோபால்பூரில் நேற்று முன்தினம் 3 முறை பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ராணுவத்தின்...
ஜம்மு காஷ்மீர் எல்லையில் மக்களின் பாதுகாப்புக்காக கூடுதல் பதுங்கு குழிகள் அமைக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அதல் துலோ தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது காஷ்மீர் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் படை பீரங்கி மற்றும் துப்பாக்கிகளால் தொடர் தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை கிராமங்களில் வசித்த பலரது வீடுகள் சேதம் அடைந்தன. கால்நடைகள் இறந்தன. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு...










