பாக். ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் பிஎஸ்எஃப் வீரரை தூங்கவிடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தி சித்ரவதை
admin - 0
பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது...
பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்கள் குறித்து எடுத்துரைக்க வெளிநாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் நாடு தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காமில், பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தது. தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின்...
ஆகஸ்ட் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் மற்றும் இலவச டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது. அதன்படி 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறை ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
22-ம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை,...
இளம் வயதில் தலை முடி கொட்டுவதால், தம்மை அழகாக்கிக் கொள்ள ஆண், பெண் இருபாலரும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர். இதற்காக உ.பி.யின் கான்பூரில் டாக்டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்துவமனைக்கு இளம் பொறியாளர்கள் 2 பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அவர்களில் உ.பி.யின் பரூக்காபாத்தை சேர்ந்த பொறியாளர் மயங்க் கட்டியார் என்பவர் கடந்த நவம்பர் 18-ல் அனுஷ்கா மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்றார். ஆனால்...
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்துவருகிறது. குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையே மேக்கேதாட்டு, கனகபுரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில்...
மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவரின் 14 கேள்விகள் என்ன?
admin - 0
மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த...
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் ஜூன் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார். உத்தர பிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா (40). இந்திய விமானப்படை விமானியான அவர், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்காக ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் அவர் சிறப்பு பயிற்சி பெற்றார்.
இந்த சூழலில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான...
பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் (ஐஏஇஏ) கூறியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து ஐஏஇஏ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை" என்றார்.
முன்னதாக, பாகிஸ்தானில் அணுசக்தி அமைப்புகள் அமைந்திருக்கும்...
பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க சிறப்பு திட்டம்: உமர் அப்துல்லா
admin - 0
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர், இது காஷ்மீரின் சுற்றுலா துறைக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. அதன்பின் காஷ்மீர் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா உட்பட சில நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியது.
இதனால் பெரும்பாலான உணவு மற்றும் தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் படகு வீடுகள் காலியாகிவிட்டன. அனைத்து வகை தங்கும் விடுதிகளில் சுமார்...
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி உயிரிழப்பு? – காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 3 பேர் மரணம்
admin - 0
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இவர்களுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா அருகே உள்ள நாதர் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போகு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு...










