Google search engine
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு குண்டூர் மாவட்டம், தெனாலியில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கருப்புக்கொடி காட்டப்பட்டு ‘கோ பேக் ஜெகன்’ என முழக்கம் எழுப்பப்பட்டது. குண்டூர் மாவட்டம், தெனாலியில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அவரது வருகைக்கு தலித் சங்கங்கள், மக்கள் இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெனாலி மார்க்கெட் வளாகம் கூட்டு சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்...
வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உயிரிழப்பு எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ள நிலவரம் குறித்து, மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிவாரணப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அவர் உறுதியளித்தார். அசாம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. அங்கு 5...
காஷ்மீரில் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவியதாக காவலர் உட்பட 3 அரசு ஊழியர்களை துணைநிலை ஆளுநர் நேற்று பணி நீக்கம் செய்தார். காஷ்மீர் துணைநிலை ஆளுநராக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற மனோஜ் சின்ஹா, தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 75-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை அரசியல் சாசனத்தின் 311 (2)(சி)-வது பிரிவின் கீழ் பணி நீக்கம் செய்துள்ளார். அந்த...
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகள் அவர்களின் இழப்பை ஒருபோதும் ஈடு செய்யாது என்பது எனக்கு தெளிவாக தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பதிலடியை வழங்கியது. இந்த வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையான...
தெலங்கானாவில் 17 மாவோயிஸ்ட்கள் நேற்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் சரண் அடைந்தனர். இதுகுறித்து கொத்தகூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீப காலமாக மாவோயிஸ்ட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்கவுன்ட்டர்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். சத்தீஸ்கர், ஒடிசா மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் தலைவர்கள், கமாண்டர்களும் இறந்துள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பலர் தங்கள் தவறை உணர்ந்து சரண் அடைகின்றனர். அவர்களுக்கு மத்திய,...
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருமலையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா அறிவுறுத்தியுள்ளார். ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா தலைமையில் நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆவண வீடியோவை திருப்பதி எஸ்பியும், தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரியுமான (பொறுப்பு) ஹர்ஷவர்தன் விளக்கினார். அதன்பின்னர்,...
ஆபரேஷன் சிந்தூரில் இந்திய கடற்படை போரில் இறங்கியிருந்தால் பாகிஸ்தான் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கோவா அருகில் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பயணம் செய்து அதன் செயல்பாட்டு தயார் நிலையை ஆய்வு செய்தார். பின்னர் கடற்படை மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அவர்...
தன்னார்வலர்கள் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவை உ.பி. அரசு விரிவுபடுத்த உள்ளது. கடந்த 1962-ல் பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளுக்காக சிவில் டிஃபன்ஸ் என்கிற சிவில் பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இப்பிரிவு, உ.பி., ஒடிசா, குஜராத், இமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் 244 மாவட்டங்களில் உள்ளது. தன்னார்வலர்கள் பணியாற்றும் இப்பிரிவு, சில மாநிலங்களில் பெயரளவுக்கும் பாகிஸ்தான் எல்லைப்புற...
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவை இரண்டாவது முறையாக அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் திருப்பி அனுப்பி உள்ளார். கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2 பி பிரிவில் ரூ.2...
தீவிரவாதம் எனும் நச்சுப் பாம்பு மீண்டும் தனது தலையை தூக்க முயன்றால், துளையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு நசுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிஹார் மாநிலம் கராகத் நகரில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: இந்தியப் பெண்கள் அணியும் குங்குமத்தின் சக்தியை பாகிஸ்தானும் இந்த உலகமும் பார்த்தன. பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்பில் இருந்த தீவிரவாதிகளை...