Google search engine
 ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மூத்த அரசு அதிகாரி பைகுந்த நாத் சாரங்கியின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச வழக்கில் இருந்து தப்பிக்க 500 ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக அவர் அள்ளி வீசினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சி துறையின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் சாலை திட்ட தலைமை பொறியாளராக பைகுந்த நாத் சாரங்கி பணியாற்றி...
இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கலாம். அப்போது ராணுவத்துக்கு செலுவு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் (கேபிஎம்ஜி) கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 20147-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்- இ- தொய்பா கமாண்டர் சைஃபுல்லா கசூரி என குற்றம் சாட்டப்பட்டது. லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத் உத்தரவின் பேரில் கசூரி,...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) 2025 உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்தது. இது தற்போது, 23,500 கோடி என்ற சாதனை...
ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாஸ்குசன் வனப்பகுதியில்...
ப​னாமா நாட்​டில் மோடி அரசின் முடிவு​களை காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் பாராட்​டி​யிருப்​ப​தற்கு அவரது கட்​சி​யில் மீண்​டும் எதிர்ப்பு கிளம்​பியுள்​ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வரும் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் மோடியை​யும் மத்​திய அரசை​யும் பாராட்டி பேசி வரு​கிறார். இதற்கு காங்​கிரஸ் கட்​சி​யில் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. என்​றாலும் சசி தரூர் அதனை கண்​டு​கொள்​வ​தில்​லை. ஆபரேஷன் சிந்​தூர் குறித்து வெளி​நாடு​களிடம் விவரிக்​கும் எம்​.பி.க்​கள் குழு​வில் காங்​கிரஸ் எதிர்ப்​பை​யும்...
மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார். மேற்​கு​வங்​கத்​தின் அலிப்​பூர்​து​வாரில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது அலிப்​பூர்​து​வார் மற்​றும் கூச்​பெஹார் மாவட்​டங்​களில் ரூ.1,010 கோடி மதிப்​பிலான எரி​வாயு விநி​யோக திட்​டத்​துக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: அண்​மை​யில் மேற்​கு​வங்​கத்​தின் முர்​ஷி​தா​பாத், மால்​டா​வில் வன்​முறை சம்​பவங்​கள் அரங்​கேறின. அப்​பகுதி பொது​மக்​கள் மீது கொடூர தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. அவர்​களின்...
இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ரத்த சம்பந்தமான உறவினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சாவர்க்கரின் பேரன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார். கோட்சேவுடன் தன்னை இணைக்கும் தனது தாய்வழி வம்சாவளியை சத்யாகி சாவர்க்கர் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக ராகுல்...
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசும்​போது, “தமிழில் இருந்து பிறந்​தது​தான் கன்​னடம்​”என குறிப்​பிட்​டார். இதற்கு கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா மற்றும் கன்னட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் நேற்று பெங்​களூரு​வில் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் நடிகர் சிவ​ராஜ் குமார் பேசி​ய​தாவது:கன்னட மொழி மீதும் பெங்​களூரு மாநகரின் மீதும்...
ஜப்பானியர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக 19 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் 6 முக்கிய நபர்களை கைது செய்துள்ளது. வெளிநாட்டினருக்கு எதிராக குறிப்பாக ஜப்பான் நாட்டு மக்களை குறிவைத்து இந்தியாவில் நடைபெறும் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியாளர்கள் என்று கூறி இக்கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சட்டப்பூர்வ...