Google search engine
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் வேளையில் பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட மாநில பாஜக நிர்வாகிகள் நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். முன்னதாக அனைத்து அமைச்சர்களும் கரோனா பரிசோதனைக்கு உட்படுவது அவசியம் எனவும் பிரதமருடன் மேடையில் இருப்பவர்களும் தங்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அட்டையை காண்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாக மத்திய...
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் தங்கிய பிறகு புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் ஸ்ரீ நகருக்கு நேற்று திரும்பினார். முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா இதுகுறித்து கூறுகையில், “வைஷ்ணவி தேவி கோயிலில் சிறந்த தரிசனம் கிடைத்தது. அமைதி, முன்னேற்றம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்கான எங்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது....
மும்பை ரயில் விபத்தைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்துக்குள் தானியங்கி கதவுகளுடன் கூடிய புறநகர் ரயில் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ராவில் நேற்றுமுன்தினம் கூட்ட நெரிசல் காரணமாக இரண்டு ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் மோதி தண்டவாளத்தில் விழுந்தனர். இதில், ரயில்வே காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில்...
மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சியை, அவரது மனைவி சோனம் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை. கடந்த...
தெலங்கானா மாநில பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை ஹைதராபாத்தில் போலீஸார் கைது செய்தனர். மேலவை உறுப்பினராக உள்ள கவிதா, நேற்று பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அணியினருடன் இணைந்து தெலங்கானா மாநில அரசு பேருந்து கழக அலுவலகம்...
ஸ்வர்னாந்திரா தொலைநோக்கு திட்டம் 2047-ன் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கான வழியைக் காண முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆந்திராவின் விரைவான வளர்ச்சிக்காக ஸ்வர்னாந்திரா தொலை நோக்கு திட்டம் 2047, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம், பால்வளம், மீன்வளம், தோட்டக்கலை, தொழில்துறை, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சேவைத் துறைகள் மற்றும் தகவல்...
வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பிய எம்.பி.க்கள் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, உலக நாடுகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில்...
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி...
இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (க்யூஆர் - எஸ்ஏஎம்) வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கியபோது தரைவழி தாக்குதலைவிட வான் வழி தாக்குதல்தான் அதிகமாக இருந்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலனவை துருக்கி மற்றும் சீன...
கடந்த 11 ஆண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி குறித்து ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்... ஒரு புதிய பாரதம் உருவாகிறது - இங்கு வளர்ச்சி என்பது உள்நாட்டு மொத்த உற்பத்தியால் (ஜிடிபி) அளவிடப்படுவதில்லை. கவுரவம் மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. கடப்பாவைச் சேர்ந்த அன்னம் லட்சுமி பவானி சணல் பை தயாரிக்கும் அலகை தொடங்குவதற்கு முத்ரா கடன் பெற்றார். ஹரியானாவில்...