நாட்டின் 80-வது சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக டெல்லி செங்கோட்டை நேற்று முன்தினம் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆய்வு துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இதற்காக பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதே தொடங்கியுள்ளன.
டெல்லி செங்கோட்டை...
ரூ.30 கோடி முதல் பரிசு கொண்ட ஓணம் பம்பர் லாட்டரியை கேரள முதல்வர் வி.டி.சதீசன் நேற்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து முதல்வர் வி.டி.சதீசன் தனது முகநூல் பதிவில், “லாட்டரி வரலாற்றில் மிக அதிக முதல் பரிசு இதுவாகும். இந்த லாட்டரி சீட்டுகள் ஜூலை 20 முதல் விற்பனைக்கு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்பட்டது. இது இந்த ஆண்டு...
ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை நியமிப்பதை தவிர்க்க கப்பல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
admin - 0
அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஹார்முஸ் ஜலசந்தியில் ‘எம்டி அல் பாஹியா’, ‘எம்டி மொம்பாசா’ ஆகிய 2 கப்பல்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரு கப்பல்களிலும் இருந்த 46 பணியாளர்களில் 30 பேர் இந்திய மாலுமிகள் ஆவர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.
இந்நிலையில், கடல்சார் நிர்வாக பொது இயக்குநரகம் (டிஜிஎம்ஏ)...
வயதான கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் திட்டம்: 3 மாதத்தில் கொள்கை வகுக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான கொள்கையை 3 மாதங்களுக்குள் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குணப்படுத்த முடியாத நோய்களால் அவதிப்படும் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த கைதிகளை கருணை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து நாடு தழுவிய வழிகாட்டுதல்களை உருவாக்கக்...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் இல்லத்தில் பாஜக உயர்நிலைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நவீன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.
எனினும், பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சு நிலவும் சூழலில் இக்கூட்டம்...
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 66-ல் உள்ள 4 மாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் மின்சார வாகன பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டிருந்தபோது மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் வாகனங்களுக்கு வேகமாக பரவி தீப்பிடித்துள்ளது. இதனால் கட்டிடம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்து தீ மளமளவென பரவியது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹைட்ராலிக் ஏணிகளுடன் தீயணைப்புத் துறையினரும்,...
“இந்தியா - இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த ஒப்பந்தம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து பிரதமர்...
மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் காவல் துறையும் அசாம் ரைபில்ஸ் படையும் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டன. இதில் மேற்கு இம்பால் மாவட்டம், லோக்டாக் ஏரிக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
இதுபோல் சுராசந்த்பூர் மாவட்டம் காட்டுப் பகுதியில் இருந்து ஆயுதக் குவியலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதில் பல்வேறு ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், 5 கையெறி குண்டு, வாக்கி- டாக்கிகள், மார்புக் கவசப் பைகள், தலைக்...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் திட்டத்தை தடுத்தவர் பிரதமர் மோடி: போலந்து வெளியுறவு அமைச்சர் புகழாரம்
admin - 0
உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதைத் தடுத்ததில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியப் பங்காற்றினார் என்ற போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் விளாடிஸ்லா பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பார்டோசெவ்ஸ்கி கூறியதாவது: சர்வதேச அளவில் ரஷ்ய அதிபர் புதின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய மிகச் சில உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும் ஒருவர். மோடியின் கருத்துகளுக்கு...
கேரளாவில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே ரூ.60,000 கோடிசெலவில் சூரியசக்தி அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக இடைக்கால அறிக்கையை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) முதன்மை ஆலோசகராக இருந்த ஸ்ரீதரன் கேரள அரசிடம் அளித்திருந்தார்.
இது குறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் நேற்று கூறியதாவது: இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் அல்லது நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் தொடங்க வேண்டாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இத்திட்டத்தில்...










