Google search engine
மகா​ராஷ்டிர முன்​னாள் துணை முதல்​வரும், தேசியவாத காங்​கிரஸ் கட்​சி​யின்​(என்​சிபி) மூத்த தலை​வரு​மாக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் நடை​பெற்ற விமான விபத்​தில் மரணம் அடைந்​தார். இந்​நிலை​யில் கட்​சி​யில் குழப்​பங்​கள் ஏற்​படு​வதைத் தவிர்க்​க​வும், ஆட்​சி​யில் என்​சிபி கட்​சிக்​கான முக்​கி​யத்​து​வம் குறை​யாமல் இருக்​க​வும், அஜித் பவாரின் மனை​வி​யும், மாநிலங்​களவை எம்.பியு​மான சுனேத்ரா பவாருக்கு துணை முதல்​வர் பதவி வழங்கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அவர் துணை முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அத்துடன் தேசியவாத...
மத்​திய ஆயுதப்​படை(சிஆர்​பிஎஃப்) படை​யினரின் வீரதீர தினத்தை முன்​னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் கூறிய​தாவது: “சிஆர்​பிஎஃப் படை​யினரின் வீரதீர தினத்தை முன்​னிட்​டு, நமது படையைச் சேர்ந்த துணிச்​சலான மற்​றும் வீரமிக்க வீரர்​களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகளை​யும், மரி​யாதைக்​குரிய அஞ்​சலியை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். சிஆர்​பிஎஃப் படையினரின் வீர​மும் தியாக​மும் ஒவ்​வொரு நாளும் நமது தேசத்தைப் பாது​காக்​கின்​றன. அதே​ நேரம், சிஆர்​பிஎப் மற்​றும் சிஏபிஎஃப் பணி​யாளர்​களுக்கு உரிய நேரத்​தில்...
மேற்கு ஆசிய போருக்கு மத்​தி​யில் 15,400 டன் திர​வ​மாக்​கப்​பட்ட பெட்​ரோலிய வாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த கப்​பல் நவி மும்பை துறை​முகம் வந்​தடைந்​தது. மேற்கு ஆசிய போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. எனினும், மத்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதையடுத்​து, ஈரான் அரசு இந்​தி​யா​வுக்கு வர வேண்​டிய கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு கப்​பலை விடு​வித்து வரு​கிறது. அந்த வகை​யில், இந்​தி​யக்...
மேற்கு வங்க மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்புத் திருத்​தப் பணிக்​காக (எஸ்​ஐஆர்) உச்​ச நீ​தி​மன்ற அறிவுறுத்​தலின்​படி பிற மாநிலங்​களில் இருந்து நீதித்​துறை அதிகாரி​கள் வரவழைக்​கப்​பட்​டிருந்​தனர். கடந்த ஏப்​ரல் 1ம் தேதி, மால்டா மாவட்​டத்​தின் காலி​யாசக் மற்​றும் மோதாபரி பகு​தி​களில் பணி​களில் ஈடு​பட்​டிருந்த 7 நீதித்​துறை அதி​காரி​களை சமூக விரோத கும்​பல் ஒன்று சுற்றி வளைத்து சிறைபிடித்​தது. இதில் மூன்று பெண் அதி​காரி​கள் மற்​றும் 5 வயது குழந்​தை​யும் அடங்​கு​வர். சுமார்...
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்​கறிஞர் அஸ்​வினி உபாத்​யாய் தாக்​கல் செய்த பொதுநல மனு​வில் கூறியிருப்பதாவது:பல்​வேறு சேவை​களுக்கு ஆதார் எண் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறு​வதற்​கான நடை​முறை​கள் பலவீன​மாக உள்​ளன. இதனால் ஊடுரு​வல்​காரர்​கள் எளி​தாக ஆதார் எண்ணை பெற்​று​விடு​கின்​றனர். இதை தடுக்க நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர், சிறுமியருக்கு மட்​டுமே ஆதார் எண்ணை வழங்க வேண்​டும். அதற்கு மேற்​பட்​ட​வர்களுக்கு ஆதார் எண் வழங்​கப்​படக்​கூ​டாது.இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்டு...
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்​பன் கோயி​லில் அனைத்து வயது பெண்​களும் வழிபட அனு​ம​தி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமை​யிலான 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​சாசன அமர்வு விசா​ரிக்க தொடங்​கி​யுள்​ளது. 2-வது நாளான நேற்று மத்​திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மத வழக்​கங்​கள் மூட நம்​பிக்​கையா என்​பதை நீதி​மன்​றங்​கள்...
நாட்​டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்யப்​பட்​டது. நாட்​டில் கடல் வழித்​தடம் மற்​றும் நீர்​நிலைகள் அதி​கள​வில் உள்ளன. விமான நிலை​யம் அமைக்க முடி​யாத இடங்​களில் கடல் விமான போக்​கு​வரத்தை ஏற்​படுத்தி சுற்​றுலாவை மேம்​படுத்த திட்​ட​மிடப்​படு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக ரிஷிகேஷில் வர்த்தக ரீதி​யாக கடல் விமான போக்​கு​வரத்தை ஏற்​படுத்த ஸ்கை​ஹாப் ஏவி​யேஷன் என்ற நிறு​வனம் தயா​ராகி வரு​கிறது. இந்​நிறு​வனத்​தின் கடல் விமானம் ரிஷிகேஷில்...
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை இங்கே... இந்​தியா முழு​வதும் பிஹு, விஷு, வைசாகி மற்​றும் தமிழ்ப் புத்தாண்டு என விழாக் ​கோலம் பூண்​டுள்ள இவ்​வேளை​யில், மக்கள் அனை​வருக்​கும் எனது இதயங்​க​னிந்த வாழ்த்​துகளை தெரிவித்துக் கொள்​கிறேன். இந்த நன்​னாளில் புதுப்​பித்​தல் உணர்வு நம்மை நிரப்​புவது போல, இந்​திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்​றுப் பாதை​யில் பயணிக்கத் தயா​ராகி​விட்​டது. குறிப்​பாக, ஏப்​ரல் 11 அன்று மகாத்மா ஜோதிபா பூலே​வின் 200-வது பிறந்​த​நாள்...
மேற்கு வங்க மக்​கள் பல நூற்​றாண்​டு​களாக மீன் உணவுக்​குப் பழகி விட்​டனர். மேலும், காளி, துர்கா உள்​ளிட்ட கடவுள்​களுக்​கும் மீன் உணவு​களைப் படைக்​கின்​றனர். அங்கு மீன் உணவை சைவ​மாகக் கருதி உண்​ணும் பிராமணர்​களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் பேசுபொருளாகி உள்​ளது. இது குறித்​து, முதல்​வர் மம்தா பிரச்​சா​ரத்​தில் பேசுகை​யில், "பாஜக ஆட்​சிக்கு வந்​தால், வங்​காள மக்​களின் உணவுப் பண்​பாடு, குறிப்பாக நமக்கு மிக​வும் பிடித்​த​மான மீன்...
அ​சாமில் மாட்​டிறைச்சி உண்​பது குறித்த தனது நிலைப்​பாட்டை முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்​ளார். என்​றாலும் முந்​தைய நிலைப்​பாட்​டில் இருந்து அவர் பின்​வாங்கி விட்​ட​தாக சமாஜ்​வா​தி, ஆம் ஆத்மி ஆகிய கட்​சிகள் விமர்​சனம் செய்​துள்​ளன. இது தொடர்​பாக ஹிமந்த பிஸ்வா சர்​மா, செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “முஸ்​லிம்​கள் மாட்​டிறைச்சி சாப்​பிடு​கிறார்​கள். அதற்​குத் தடை ஏதும் இல்​லை. அசாமில் மாட்​டிறைச்சி சாப்​பிடும் முஸ்​லிம் சமூகம் பெரிய அளவில் உள்​ளது. அவர்​களைச் சாப்​பிட வேண்​டாம்...