Google search engine
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்ரமுடன் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் படம் உருவாகி உள்ளது....
‘முருகா' அசோக் குமார், அஜய், சோனியா, மாறன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. டேனியல் ஜே வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு பாலசுப்ரமணியம் இசை அமைக்கிறார். எம்.வி.ராமச்சந்திரன் இயக்குகிறார். வி.வி.எஸ். சுப்ரீம் பிலிம்ஸ் சார்பில் வினோத் வி சர்மா தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் பேரரசு, இயக்குநரும் நடிகருமான ஆர்.அரவிந்தராஜ், நடிகர் சக்திகுமார், இயக்குநர் பாரதி கணேஷ்...
அனைத்து பிரச்சினைகளும் முடிவுற்று, ஓடிடியில் வெளியாகியுள்ளது ‘தங்கலான்’ திரைப்படம். ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான படம் ‘தங்கலான்’. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இதன் ஓடிடி வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதற்கு காரணமாக சரியான தருணத்தில் ஓடிடி நிறுவனத்துக்கு படத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்டு ‘தங்கலான்’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில்...
இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை படமாக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் ராமராக, ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ யாஷும் நடிக்கின்றனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யாஷின், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில் ஜெட்டாவில் நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ரன்பீர் கபூரிடம் ‘ராமாயணம்’ படம் பற்றிக் கேட்கப்பட்டது....
‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின் ‘கைதி’, ’மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களை இயக்கினார். இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘கூலி’ படத்தை முடித்ததும் அவர் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்,...
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம், ரூ.600 கோடி வசூலைக்கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவர் நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஷ்மிகா, அந்த கதாபாத்திரம் பற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “ஸ்ரீவள்ளிக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு சிறப்பு வாய்ந்தது. அவள்...
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு அவர் நடித்திருக்கும் அனைத்துப் படங்களுமே பிடிக்கும். ஆனால், எம்.ஜி.ஆர் நடித்து அவருக்கு அதிகம் பிடித்த படங்களில் ஒன்று ‘பெற்றால்தான் பிள்ளையா’. இதை அவரே சொல்லியிருக்கிறார். சார்லி சாப்ளினின் ‘த கிட்’ படப்பாதிப்பில் உருவான படம் இது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் சேர்த்து எடுத்தார்கள். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, அசோகன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, தங்கவேலு...
தயாரிப்பாளரும் நடிகருமான ஜேஎஸ்கே இயக்குநராகும் படம், 'ஃபயர்'. இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவா வசனம் எழுதியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர்...
“இது ஒரு கெட்ட கனவு. இதை முழுமையாக இதை மறுக்கிறேன். இதுபோன்ற ’ஏஐ’ ஆபாச வீடியோக்களால் மற்ற பெண்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பாக இருக்கவும் நான் வேண்டிக்கொள்கிறேன்” என நடிகை பிரக்யா நாக்ரா தெரிவித்துள்ளார். ‘ஏஐ’ மூலம் உருவாக்கப்பட்ட நடிகை பிரக்யா நாக்ராவின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “இது ஒரு...
மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோயில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும் கருப்பணசுவாமிக்கு அரிவாள் நேர்த்திகடனும் அவர் செலுத்தினார். பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தாலும், சமீபத்தில் வெளியான ‘அமரன்’ பட மூலம் புகழ் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு இன்று (டிச.08) வந்தார். மலை மீதுள்ள ஆறாவது படை வீடு, பழமுதிர்ச்சோலை முருகன்...