தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', ‘வாரணம் ஆயிரம்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகிசிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை...
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த 2022-ம் ஆண்டு முகமது ரியாஸ் மற்றும் முகமது கவுஸ் ஆகியோரால் கொலை செய்யப்பட்டார். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சையான கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கன்னையா லால் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையப்படுத்தி ‘உதய்ப்பூர் ஃபைல்ஸ்’ என்ற...
பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, சாய் ராஜ்குமார், பாவெல் நவகீதன், மாஸ்டர் அஜய் உள்ளிட்டோர் நடித்து 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘குற்றம் கடிதல்’. இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. இதை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பரேஷன் மூலம் சதீஷ்குமார் தயாரித்து நடிக்கிறார். எஸ்.கே.ஜீவா இயக்குகிறார். பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்திசாவ்லா, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர்...
நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘எல் 2 : எம்புரான்’ என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில்...
‘தோனி கபடி குழு', ‘கட்சிக்காரன் ' படங்களை இயக்கிய ப.ஐயப்பன், அடுத்து இயக்கியுள்ள படம், ‘உழவர் மகன்’. இதில் நாயகனாக கவுஷிக், நாயகிகளாக சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் விஜித் சரவணன், யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதி பதி, குமர வடிவேல் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே.முருகன் தயாரித்துள்ளார். நா.ராசா, இணை தயாரிப்பு செய்கிறார். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில்...
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இதை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் ஜாக்கி சான் படங்களில் பணியாற்றியவருமான ஆன்டி லாங் சண்டைக்...
நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராஜவேல் கூறும்போது, "முதல் படம் எடுப்பது சவாலான விஷயம்....
சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி பிரிந்துவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. ‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரித்தால், “ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக...
இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு புகழாரம் சூட்டி, கருத்து தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். இதில் ‘மண்டேலா’ படத்துக்காக தேசிய விருது வென்றுள்ளார். தற்போது விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான கதையினை இறுதி செய்து வருகிறார். இப்படத்தினை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ், மடோன் அஸ்வின், ரத்னகுமார், சந்துரு உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்கள். தற்போது ‘கூலி’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில்...
‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில்...