ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை அடுத்து இயக்குநர் அட்லி, சல்மான் கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. இதில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இதற்காக ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் பட்ஜெட் காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியானது.
இதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்தியா படத்தை அட்லி இயக்குகிறார். இதை சன் பிக்சர்ஸ்...
ஹாலிவுட் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச், ‘47 ரோனின்’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்டவர். அவர் அடுத்து ‘ஒயிட் ஹார்ஸ்’ என்ற அறிவியல் புனைகதை வெப் சீரிஸை இயக்க இருந்தார்.
இதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவருடன் கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. 44 மில்லியன் டாலர் பட்ஜெட் என்று கணிக்கப்பட்டு, அவருக்கு 11 மில்லியன் டாலரை முதலில் கொடுத்திருந்தது. பின்னர் அந்த தொகை குறைவாக இருப்பதாகக் கூறியதை அடுத்து...
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் ஜூன் 5- ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் கமல்ஹாசன்...
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் இருந்து, மாறி தற்போது எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். பனம்பிள்ளி நகரில் உள்ள மம்மூட்டியின் வித்தியாசமான பங்களாவின் முன் நின்று ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் அந்த பங்களா, ரசிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது.
விகேஷன்...
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படம் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எம்புரான்’. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித்...
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - விக்ரமை கொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தேடிக் கொண்டிருப்பதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதை ட்ரெய்லரில் வரும் வசனங்கள், காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், ஜி.வி.பிரகாஷின் வெறியூட்டும் பின்னணி இசை எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. முழு மாஸ் ஆக்ஷன் அவதாரம்...
விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் ரவி அரசு. பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால். அதில் சுந்தர்.சி உடனான பேச்சுவார்த்தை பட்ஜெட் பிரச்சினையால் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிப்பவர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே இன்னும் முடிவாகாமல் உள்ளது. விஷாலே தயாரிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ‘ஈட்டி’...
சூர்யா நடிக்கவுள்ள படத்துக்கு மமிதா பைஜு உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சூர்யா நடிக்கவுள்ள இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மே மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதில்...
ஊதியம், இஎஸ்ஐ, பி.எஃப்-பை ஒருங்கிணைக்க புது திட்டம்: திரைப்பட தொழிலாளர்களுக்கு வருகிறது டிஜிட்டல் கார்டு
admin - 0
சினிமா என்பது கூட்டு முயற்சி. ஒவ்வொரு திரைப்படத்துக்கு பின்னும் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன்கள் மட்டுமல்லாமல், ஏராளமான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பும் இருக்கிறது. லைட்மேனில் இருந்து அரங்க அசிஸ்டென்ட் வரை சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவர்கள் தான்.
பெரும் உழைப்பில் உருவாகும் சினிமாவில், அமைப்புசாரா தொழிலாளர்களாக இருப்பதால், சினிமா தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்ளிட்டவை கிடைப்பதில்லை. இதற்காகப் பல வருடங்களாகத் திரைப்பட தொழிலாளர் அமைப்புகள்...
நடிகை த்ரிஷா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’, அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து 2005-ம் ஆண்டு வெளியான படம் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது.
மகேஷ் பாபு ஜோடியாக த்ரிஷா நடித்து வெளியான தெலுங்கு படம் ‘அத்தடு’. த்ரி விக்ரம் னிவாஸ் இயக்கிய இந்தப் படம் பஞ்ச் வசனங்களுடனும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடனும் கமர்ஷியல் கதையாக வெளி யானது....










