Google search engine
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம், ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிகுமார், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். வரும் 21-ம் தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, ‘லவ் டுடே’ படத்துக்குப்...
நடிகர் சூரி, ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடந்து வருகிறது. அங்கு அவர் தங்கியிருக்கும் அறைக்கு எதிரில் கட்டிட வேலை நடந்து வருகிறது. ஒருவர் சுவரில் தொங்கியபடி பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்துள்ள சூரி, ‘விடாமுயற்சி’ பாடலுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “சுவர்களில் நிறத்தை அன்று பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளைப் பதிக்கிறேன்” என்று...
திருப்பதியில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் கார்த்தி. இன்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார் கார்த்தி. அப்போது அங்கிருந்த பலரும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பின்பு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “மகன் பிறந்த பிறகு திருப்பதிக்கு வரவே இல்லை. ஆகையால் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தது நன்றாக இருந்தது. அடுத்து ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ மற்றும் ‘கைதி 2’...
தர்ஷன், காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘கனா’ மற்றும் ‘தும்பா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ளார் தர்ஷன். இவர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். இப்படத்துக்கு ‘ஹவுஸ் மேட்ஸ்’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபேன்டஸி ஹாரர் காமெடி பாணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள். இதில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா ,...
பேசாப் பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே என்று ‘காதல் என்பது பொதுவுடைமை’ இசை வெளியீட்டு விழாவில் ரோகிணி பேசினார். வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்கள். இந்த...
மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன், கடந்த 2022-ம் ஆண்டு, நடிகை ஒருவரைக் காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக அந்த நடிகை கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், “சமூக ஊடகங்களில் வெளியிடும் பதிவுகள் மூலம் தன்னை அவமதித்தும் டேக் செய்தும் தனது பெயரில் ஆடியோ குறிப்புகளையும் சனல் குமார் சசிதரன்...
இந்த ஆண்டு ஜனவரியில் 26 படங்கள் வெளியாயின. இதில், ‘மத கஜ ராஜா’ ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. ‘குடும்பஸ்தன்’ படமும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த மாதம் 6-ம் தேதி அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி' வெளியானது. 7-ம் தேதி தெலுங்கு படமான ‘தண்டேல்’ வெளியானது. வரும் 14-ம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு 10 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ்...
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியான முதல் 4 நாட்களில் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். விமர்சன ரீதியில் ‘ஆவரேஜ்’ எனக் குறிப்பிடப்படும் இந்தப் படம், அஜித் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ தன்மைகளைத்...
நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது. படம்பற்றி நடிகர் பவிஷ் நாராயண் கூறியதாவது: நான்...
உலகெங்கும் இயங்கும் இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ‘கிராமி விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் பிப்ரவரி 3-ம் தேதி இந்த ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. கிராமி விருது விழா எப்போதுமே புகழுக்கும் சர்ச்சைக்கும் சேர்ந்தே பெயர் பெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் உடைகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கிராமி விழாவுக்கு வருகைத் தந்திருந்த பிரபல ராப்...